sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

தினம் தினம்

/

டவுட் தனபாலு

/

" டவுட்' தனபாலு

/

" டவுட்' தனபாலு

" டவுட்' தனபாலு

" டவுட்' தனபாலு


PUBLISHED ON : செப் 08, 2011 12:00 AM

Google News

PUBLISHED ON : செப் 08, 2011 12:00 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பா.ம.க., நிறுவனர் ராமதாஸ்: இனி, வன்னியர்கள் வேறு எந்த கட்சியிலும் உறுப்பினர் இல்லை என்ற நிலை உருவாக வேண்டும்.

வன்னிய கிராமங்களில் பிற கட்சிக் கொடி கம்பங்களை சுமுகமான முறையில் அகற்ற வேண்டும். வன்னியர் என்றாலே, அவர் பா.ம.க., என்ற நிலையை உருவாக்க வேண்டும்.



டவுட் தனபாலு: இங்கே இப்படி பேசறீங்க... மற்ற இடங்கள்ல, 'சமூக சமத்துவத்துக்காக போராடுற ஒரே கட்சி பா.ம.க., தான்'கிறீங்க... சுமுகமா கொடியை அகற்றணும்னு பத்த வச்சிருக்கீங்க... அது எவ்ளோ சுமுகமா இருக்கும்னு, மக்களுக்குத் தெரியாதா...?



திராவிடர் கழகத் தலைவர் வீரமணி: டில்லி ஐகோர்ட் வளாகத்தில் குண்டு வெடித்துள்ளது. தவறிழைத்த பயங்கரவாதிகள் யாராக இருந்தாலும், சட்டத்தின் முன் கொண்டு வந்து உடனடியாக நிறுத்த வேண்டும். குற்றவாளிகள் தண்டிக்கப்படுவதோடு, இந்த பயங்கரவாதிகள் தலையெடுக்கவிடக் கூடாது.



டவுட் தனபாலு: என்னமோ போங்க... உங்க நிலைப்பாடே புரிய மாட்டேங்குது... நீங்க தான் ஒரு சிலரை, 'தண்டிக்கணும்; மீண்டும் தலையெடுத்துவிடக் கூடாது'ன்னு சொல்றீங்க... நீங்க தான் ஒரு சிலரை, 'மன்னிச்சுவிட்டுடணும்... மனிதாபிமான முறையில செயல்படணும்'கிறீங்க... பாவம், இந்த அரசாங்கம் என்ன தான் செய்யும்...?



தி.மு.க., தலைவர் கருணாநிதி: சமச்சீர் கல்வியை ஏற்க மறுத்து, பழைய பாடத்திட்டத்தின்படி புத்தகங்களை அச்சடிக்க கொடுத்தார். அந்தப் புத்தகங்களின் கதி என்ன? அதற்காக அரசுக்கு ஆன செலவு எவ்வளவு? இதற்கெல்லாம் அ.தி.மு.க., ஆட்சியினர் பதில் கூற வேண்டும்.



டவுட் தனபாலு: அதுல என்ன சந்தேகம்... புதிய தலைமைச் செயலகக் கட்டடத்துக்காக, பல கோடி ரூபாய் செலவுல, 'டம்மி'யா ஒரு, 'சினிமா செட்டிங்' போட்டீங்களே... அதுக்கு என்ன கதி ஆச்சோ, அதே கதி தான் இதுக்கும்...!








      Dinamalar
      Follow us