PUBLISHED ON : ஆக 28, 2025 12:00 AM
சென்னை தமிழக அரசின், தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனத்தின் சார்பில், மூன்று நாள் அழகு கலை பயிற்சி நடைபெற உள்ளது.
பயிற்சி வகுப்புகள், வரும் செப்., 10 முதல் 12ம் தேதி வரை மூன்று நாட்கள், கிண்டி, ஈக்காட்டுத்தாங்கல் வளாகத்தில், நடக்கிறது.
பயிற்சியில் பிரைடல், பேஷன், எச்.டி., சினிமா மேக்கப், சிகை அலங்காரம் உள்ளிட்ட, 12 வகையான மேக்கப் பயிற்சிகள் அளிக்கப்படுகிறது.
பயிற்சி பற்றிய கூடுதல் விபரங்கள் பெற விரும்புவோர், www.editn.in என்ற வலைதளத்தில் தெரிந்து கொள்ளலாம். முதலில் பதிவு செய்வோருக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
மேலும், விபரங்கள் பெற, திங்கள் முதல் வெள்ளி வரை காலை 10:00 மணி முதல் மாலை 5:45 மணி வரை 95437 73337, 93602 21280, என்ற மொபைல் போன் எண்ணில், தொடர்பு கொள்ளலாம்.
பயிற்சி முடிப்போருக்கு அரசு சான்றிதழ் வழங்கப்படும். பயிற்சியில், பங்கேற்க விரும்புவோர், www.editn.in என்ற வலைதளத்தில், கட்டாயம் முன்பதிவு செய்ய வேண்டும் என, தெரிவிக்கப்பட்டு உள்ளது.