தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/டீ கடை பெஞ்ச்/ கூட்டுறவு பணியாளர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி

 கூட்டுறவு பணியாளர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி

 கூட்டுறவு பணியாளர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி


PUBLISHED ON : டிச 02, 2025 04:58 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : டிச 02, 2025 04:58 AM


Follow on Google
அ நிறம் | அளவு

காஞ்சிபுரம்: கூட்டுறவு பணியாளர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி நேற்று நடந்தது.

காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு வங்கி தலைமை அலுவலகத்தில், நேற்று நடந்த திறன் மேம்பாட்டு பயிற்சி முகாமிற்கு, காஞ்சிபுரம் மண்டல கூட்டுறவு இணைப் பதிவாளர் யோகவிஷ்ணு தலைமை வகித்தார்.

ஓய்வு பெற்ற கூட்டுறவு சார் - பதிவாளர் ரகுராமன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று, பயிர் கடன், கால்நடை கடன், மகளிர் சுய உதவி குழு கடன் உள்ளிட்ட பல்வேறு விதமான கடன் வழங்குவது மற்றும் வசூலிப்பது குறித்து எடுத்துரைத்தார்.

காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு வங்கி மேலாளர் சீனிவாசன் உள்ளிட்ட கூட்டுறவு துறை ஊழியர்கள் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us