sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

தினம் தினம்

/

டவுட் தனபாலு

/

" டவுட்' தனபாலு

/

" டவுட்' தனபாலு

" டவுட்' தனபாலு

" டவுட்' தனபாலு


PUBLISHED ON : செப் 22, 2011 12:00 AM

Google News

PUBLISHED ON : செப் 22, 2011 12:00 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ம.தி.மு.க., பொதுச் செயலர் வைகோ: கூடங்குளத்தில் அணுமின் நிலையம் அமைக்க, சோவியத் ரஷ்யாவுடன் செய்த ஒப்பந்தத்தை, 1988ல், அன்றைய பிரதமர் ராஜிவ், பார்லிமென்டில் அறிவித்தபோது, அதை எதிர்த்த ஒரே எம்.பி., என்ற வகையில், தமிழக முதல்வரின் நடவடிக்கையைக் கண்டு மகிழ்ச்சி அடைகிறேன்.



டவுட் தனபாலு: என்னங்க செய்றது...

1988ல இருந்தே சில பேர் போராடினாலும், 'பிரதமர்ட்ட பேசினேன்; குழுவினரை சமாதானப்படுத்திவிட்டேன்; அமைச்சரவையை கூட்டுவேன்'னு சொல்லி, வேறு சிலருக்கு அந்த நல்ல பெயர் போயிடுது... அதுக்கெல்லாம் கொஞ்சம் ராசி வேணுமோ...!



தி.மு.க., தலைவர் கருணாநிதி: இந்தியாவில் யார் வேண்டுமானாலும் உண்ணாவிரதம் இருக்கலாம். லட்சக்கணக்கான ஏழை மக்கள் இப்போது, தொடர்ந்து இருக்கும் உண்ணாவிரதத்தை நீக்குவதற்கு, இந்த உண்ணாவிரதங்கள் பயன்பட வேண்டும் என்பது தான் என் விருப்பம்.



டவுட் தனபாலு: அடக்கொடுமையே... இதுவரை, 15 வருஷத்துக்கும் மேல, ஐந்து முறை முதல்வராக இருந்தீங்களே... அது, ஏழை மக்கள் தொடர்ந்து இருக்கிற உண்ணாவிரதத்தைப் போக்கப் பயன்படலையா...?



தமிழக காங்., செய்திக்குறிப்பு: ராஜிவை படுகொலை செய்த தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த மூன்று பேருக்கு, சுப்ரீம் கோர்ட் கொடுத்த தூக்கு தண்டனையை உடனடியாக நிறைவேற்றக் கோரி, தமிழக காங்கிரஸ் சேவாதளம் சார்பில் உண்ணாவிரதம் நடைபெறும்.



டவுட் தனபாலு: அடடே... பயங்கர சுறுசுறுப்பாகிட்டீங்க போலத் தெரியுதே... சுப்ரீம் கோர்ட் தூக்கு தண்டனை அறிவிச்சு, 11 வருஷமாகிடுச்சு... இதுல எட்டு வருஷமா உங்க ஆட்சி தான் நடந்துட்டு இருக்குது... அப்பல்லாம் ஏன் தூக்கு தண்டனையை அவங்க நிறைவேற்றலை... அப்பல்லாம் ஏன் நீங்க அதை வலியுறுத்தி போராடலை...?








      Dinamalar
      Follow us