sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/தினம் தினம்/டவுட் தனபாலு/ 'டவுட்' தனபாலு

 'டவுட்' தனபாலு

 'டவுட்' தனபாலு

2


PUBLISHED ON : ஜூன் 11, 2026 12:20 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூன் 11, 2026 12:20 AM

2


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

முன்னாள் எம்.எல்.ஏ.,வும், வி.சி.க., பொருளாளருமான பாலாஜி: எங்கள் கட்சியில் இருந்து விலகி, தி.மு.க.,வில் இணைந்துள்ள முன்னாள் எம்.எல்.ஏ., பனையூர் பாபு, சட்டசபை தேர்தலின்போது, எங்கள் கட்சி வேட்பாளர் பட்டியல் வெளியானதில் இருந்தே, கட்சி நட வடிக்கையில் ஈடுபடவில்லை. அவருடன் சேர்ந்து நான்கு பேர் மட்டுமே தி.மு.க.,வில் இணைந்து உ ள்ளனர். எங்கள் மீது அவதுா று கருத்துகளை கூறும் தி.மு.க., வினர் மீது, அக்கட்சி நடவடிக்கை எடுக்கும் என நம்புகிறோம்.

டவுட் தனபாலு: சட்டசபை தேர்தலில், 'சீட்' தராததால, பனையூர் பாபு தி.மு.க., பக்கம் போயிட்டார் என்பதில், 'டவுட்'டே இல்லை... அதே நேரம், நாலு பேர்தானே போயிருக்காங்கன்னு நீங்க அசால்டா இருந்தா, அது, 40, 400, 4,000னு பெருகிடும் என்பதிலும், 'டவுட்'டே இல்லை!

பத்திரிகை செய்தி: திருச்சியில் உள்ள மாவட்ட பா.ஜ., தலைமை அலுவலகத்தில், மாநில நிர்வாகிகள் மற்றும் மாவட்ட தலைவர்கள் ஆலோசனை கூட்டம் நடந்தது. 'தமிழக பா.ஜ.,வின் ஒவ்வொரு நிர்வாகி யும் தங்கள் பகுதியில் உள்ள தொண்டர்களை சந்தித்து, கட்சி வளர்ச்சி பணிகளை மேற் கொள்ள வேண்டும்' என, தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் அறிவுறுத்தினார்.

டவுட் தனபாலு: உங்க கட்சி யின் முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை துவங்கியிருக்கும் புதிய இயக்கத்தில், உங்க கட்சி யினர் அணி அணியா போய் சேர்ந்துட்டு இருக்காங்க... அதனால, இல்லாத தொண்டர் களை போய் உங்க கட்சி நிர்வாகி கள் எப்படி சந்திக்க முடியும் என்ற, 'டவுட்' வருதே!

விருதுநகர் காங்., - எம்.பி., மாணிக்கம் தாகூர்: 'இண்டி' கூட்டணி கூட்டத்தில், வி.சி.க., தலைவர் திருமாவளவன் பேசிய கருத்து ஆச்சரியமாக உள்ளது. கேரளா, மேற்கு வங்கம், தமிழகத்தில் காங்கிரசை வலுப்படுத்த முயற்சிப்பது, 'இண்டி' கூட்டணியை பலவீனப்படுத்தும் செயலாக எப்படி அமையும்? காங்., வலுவாக இருந்தால் தான் இண்டி கூட்டணி வலுவாக இருக்கும். தமிழகத்தில் காங்., தன் அடையாளம், அமைப்பை வலுப்படுத்த முயற்சிப்பதை, கூட்டணியை எதிர்ப்பதாக சித்தரிப்பது சரியல்ல.

டவுட் தனபாலு: 'இண்டி' கூட்டணியை வலுப்படுத்துறோம்னு சொல்லி, உங்க தலைமை நடத்திய நாட்டாமையால, ஆம் ஆத்மி, தி.மு.க., போன்ற பெரிய கட்சிகளே ஓட்டம் பிடிச்சுட்டாங்க... எஞ்சியிருக்கும் கட்சிகளையாவது தக்க வச்சுக்கணும் என்றால், 'பெரியண்ணன்' மனோபாவத்தை காங்., மாத்திக்கணும் என்பதில், 'டவுட்'டே இல்லை!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us