தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/டவுட் தனபாலு/‘டவுட்’ தனபாலு: அக். 10

‘டவுட்’ தனபாலு: அக். 10

‘டவுட்’ தனபாலு: அக். 10

2


PUBLISHED ON : அக் 10, 2026 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 10, 2026 12:00 AM

2


2
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தே.மு.தி.க., பொதுச்செயலர் பிரேமலதா: குஜராத் முதல்வர், நாட்டின் பிரதமர் என, அரசின் தலைமை பொறுப்பில், 25 ஆண்டுகளை பிரதமர் மோடி நிறைவு செய்துள்ளார். இந்த தருணத்தில் பிரதமருக்கு என் சார்பிலும், தே.மு.தி.க., சார்பிலும் மனமார்ந்த வாழ்த்துகள். நாட்டு மக்களின் நலனுக்காகவும், இந்தியாவின் வளர்ச்சிக்காகவும் தொடர்ந்து அர்ப்பணிப்புடன் பிரதமர் மோடி மேற்கொள்ளும் மக்கள் பணிகள், மேலும் பல ஆண்டுகள் தொடர வேண்டும்.

டவுட் தனபாலு: பா.ஜ.,வுக்கு எதிரான தி.மு.க., கூட்டணியில் நீங்க இருந்தாலும், அரசியல் வேறுபாடுகளை தாண்டி மோடிக்கு வாழ்த்து சொல்லியிருப்பதை, ‘டவுட்’ இல்லாம பாராட்டலாம்... ஆனா, உங்க கூட்டணி கட்சியான, தி.மு.க., தலைவர் ஸ்டாலினுக்கு, இந்த பக்குவம் இல்லாம போனது ஏன் என்ற, ‘டவுட்’டும் சேர்ந்தே வருது!

lll

த.வெ.க., தலைமை அலுவலகம் அறிக்கை: ஆட்சிக்கு வரும் முன், எஸ்.ஐ.ஆர்., நடைமுறையை, த.வெ.க., எதிர்த்தது. இப்போதும் அதே நிலைப்பாட்டை த.வெ.க., கொண்டிருக்கிறது. எஸ்.ஐ.ஆர்., நடைமுறைகளை கண்டித்து, டில்லியில் போராட்டம் நடத்திய ராகுல் உள்ளிட்ட தலைவர்கள் மற்றும் எம்.பி.,க்கள் கைது செய்யப்பட்டதை, த.வெ.க., கண்டிக்கிறது. கைது செய்யப்பட்ட விதம் ஆட்சேபகரமானது; இத்தகைய அணுகுமுறை கைவிடப்பட வேண்டும்.

டவுட் தனபாலு: எஸ்.ஐ.ஆர்., நடைமுறையை கண்டிக்கிறதா சொல்றீங்க... ஆனா, இது சம்பந்தமான அறிக்கையை உங்க தலைவர் விஜய் பெயரிலோ அல்லது கட்சியின் முன்னணி தலைவர்கள் பெயரிலோ வெளியிடாம, பொத்தாம் பொதுவா, ‘தலைமை அலுவலகம்’ என்ற பெயரில் வெளியிட்டது, பா.ஜ.,வையும், மத்திய அரசையும் பகைச்சுக்க தயங்குறீங்களோ என்ற, ‘டவுட்’டை கிளப்புதே!

lll

பா.ஜ., தமிழக தலைவர் நயினார் நாகேந்திரன்: எஸ்.ஐ.ஆர்., எனப்படும் வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தப் பணியை எதிர்த்து, டில்லியில் காங்கிரசார் போராடுவதும், எஸ்.ஐ.ஆரில் முறைகேடு நடந்திருப்பதாகக் கூறுவதும் நகைச்சுவை நாடகம். தமிழகத்தில் ஓட்டுப்பதிவு இயந்திரங்களில் முறைகேடு நடந்திருந்தால், பா.ஜ., வெற்றி பெற்றிருக்க வேண்டும். கேரளாவில் காங்., எப்படி ஆட்சியை பிடித்தது... கர்நாடகாவில் காங்., தானே ஆட்சியில் உள்ளது?

டவுட் தனபாலு: நீங்க கேட்பது நுாற்றுக்கு நுாறு சரி... ஆனா, அதை எல்லாம் காங்கிரசார் காதுலயே போட்டுக்க மாட்டாங்க... தப்பித் தவறி லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் ஜெயித்து, ராகுல் பிரதமராகும் வரை, இதே பல்லவியைத் தான் அவங்க பாடிட்டு இருப்பாங்க என்பதில், ‘டவுட்’டே இல்லை!

lll

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us