தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/டவுட் தனபாலு/‘டவுட்’ தனபாலு: அக். 9

‘டவுட்’ தனபாலு: அக். 9

‘டவுட்’ தனபாலு: அக். 9

3


PUBLISHED ON : அக் 09, 2026 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 09, 2026 12:00 AM

3


3
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பா.ஜ., ஆந்திர மாநில இணை பொறுப்பாளர் வானதி சீனிவாசன்: தமிழகத்தை வளர்ச்சி அடைந்த மாநிலம் என்கின்றனர். ஆனால் இங்கு, 40 சதவீதம் பெண்கள் ரத்த சோகை நோயால் பாதிக்கப்பட்டு உள்ளனர். தி.மு.க., ஆட்சியின் இன்னொரு பரிணாமமாகத் தான் த.வெ.க., அரசு செயல்படுகிறது. ‘ஊழலற்ற ஆட்சி’ என்கின்றனர்; ஆனால், கீழ்மட்டத்தில் எந்த மாற்றமும் தெரியவில்லை.

டவுட் தனபாலு: ‘கீழ்மட்டத்தில் எந்த மாற்றமும் இல்லை’ன்னு சொல்றீங்களே... அப்படி என்றால் அமைச்சர்கள், உயர் அதிகாரிகள் அடங்கிய மேல்மட்டத்தில் ஊழல் இல்லை என்பதை, ‘டவுட்’ இல்லாம ஏத்துக்கிறீங்களா... மேல்மட்டத்தில் நடந்த மாற்றம் படிப்படியா கீழ்மட்டத்துக்கும் பரவும் என்பதிலும், ‘டவுட்’டே இல்லை!

lll

த.வெ.க.,வைச் சேர்ந்த, தமிழக பொதுப்பணித் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா: தாராபுரம் த.வெ.க., வேட்பாளர் சத்யபாமா, அமைச்சர்களுக்கு 14 லட்சம் ரூபாய் செலவில் அறைகள், ‘புக்’ செய்து கொடுத்ததாக பேசுவது போல வெளியான வீடியோ, ஏ.ஐ., தொழில்நுட்பம் வாயிலாக உருவாக்கப்பட்டது. தி.மு.க., தலைவர் ஸ்டாலின், 1,000 கோடி ரூபாய் செலவு செய்தது போல் நானும் ஏ.ஐ., வீடியோவை வெளியிடுகிறேன்; அதை பார்க்கிறீர்களா?

டவுட் தனபாலு: அது சரி... ஏ.ஐ., தொழில்நுட்ப வீடியோக்கள் எல்லாம் மிகவும் துல்லியமாகவும், தெளிவாகவும் இருக்கும்... ஆனா, உங்க கட்சியின் சத்யபாமா பேசும் வீடியோ அப்படியில்லையே... அதனால தான், ‘அதை தடயவியல் சோதனைக்கு அனுப்பி, அது போலி வீடியோன்னு நிரூபிக்கிறோம்’னு சவால் விடாம பதுங்குறீங்க என்பதில், ‘டவுட்’டே இல்லை!

lll

தி.மு.க., இளைஞர் அணி செயலர் உதயநிதி: வேளாண் துறை செயலராக இருந்த ஐ.ஏ.எஸ்., அதிகாரி சங்கர், பணியிட மாற்றம் செய்யப்பட்டு ஒரு மாதமாகிறது. இப்போது வரை, வேளாண் துறைக்கு புதிய செயலர் நியமிக்கப்படவில்லை. பருவமழை தொடங்க உள்ள நேரத்தில், வேளாண் துறைக்கு நிலையான நிர்வாகத் தலைமை தேவை. அனுபவம் வாய்ந்த மூத்த ஐ.ஏ.எஸ்., அதிகாரியை வேளாண் துறைக்கு நியமிக்காமல், பொறுப்பு செயலரிடம் அந்த துறையை விட்டிருப்பது, விவசாயிகள் நலனில் இந்த அரசுக்கு துளியும் அக்கறையில்லை என்பதையே காட்டுகிறது.

டவுட் தனபாலு: உங்க ஆட்சியில், தமிழகத்தின் சட்டம் – ஒழுங்கை கவனிக்க வேண்டிய அதிமுக்கியமான டி.ஜி.பி., பதவியை 10 மாதங்களா நிரப்பாம, பொறுப்பு அதிகாரி போட்டே காலத்தைக் கடத்தினீங்களே... அப்படிப்பட்ட உங்களுக்கு, த.வெ.க., அரசை கேள்வி கேட்க தார்மீக உரிமை இருக்கா என்ற, ‘டவுட்’ வருதே!

lll

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us