தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/டவுட் தனபாலு/'டவுட்' தனபாலு: அக். 8

'டவுட்' தனபாலு: அக். 8

'டவுட்' தனபாலு: அக். 8

4


PUBLISHED ON : அக் 08, 2026 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 08, 2026 12:00 AM

4


4
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

காங்., தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே: எங்கள் கட்சி யின் மூன்று கோரிக்கைகள் மீது எந்த சமரசமும் செய்து கொள்ள முடியாது. முதலில், தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ் குமார் ராஜினாமா செய்ய வேண்டும்; இரண்டாவது, வாக்காளர் பட்டியலில் மேற்கொள்ளப்படும் சிறப்பு தீவிர திருத்த பணிகளை ரத்து செய்ய வேண்டும்; மூன்றாவது, ஓட்டுச்சீட்டு முறையில் தேர்தல் நடத்த வேண்டும்.

டவுட் தனபாலு: நாட்டை மறுபடியும் கற்காலத்துக்கே கொண்டு போகணும்னு முடிவு பண்ணிட்டீங்களோ...? நாலாவது கோரிக் கையா, 'மீண்டும் பிரிட்டிஷாரிடமே நாட்டை குடுத்துடுங்க... அவங்களே நம்மை ஆட்சி செய்யட்டும்'னு கூட சொன்னாலும் சொல்வீங் களோ என்ற, 'டவுட்' தான் வருது!



தி.மு.க., துணை பொதுச்செயலர் கனிமொழி: சட்டசபை பொதுத்தேர்தலில், அதிகமாக பிரசாரம் செய்யாத முதல்வர் விஜய், இரண்டே இரண்டு தொகு தி இடைத்தேர்தலுக்காக தெருத் தெருவாக சென்றுள்ளார். இதில் இருந்தே, 'தம்பி விஜய்'க்கு நிச்சயமாக தேர்தலில் ஒரு பயம் இருக்கிறது என்பது தெளிவாக தெரிகிறது.

டவுட் தனபாலு: சட்டசபை தேர்தலப்ப, நீங்க தான் ஆளுங்கட்சியா இருந்தீங்க... விஜய் சரியா பிரசாரம் செய்ய முடியாதபடி எத்தனை முட்டுக்கட்டைகளை போட்டீங்க... அவரை வெளியில வர விடாம வீட்டுக்குள்ளயே முடக்கிட்டு, இப்ப, 'அவர் பிரசாரமே செய்யல'ன்னு குற்றஞ்சாட்டுறது நியாயமா என்ற, 'டவுட்' தான் வருது!



பத்திரிகை செய்தி: கடந்த சட்டசபை தேர்தலில், தி-.மு.க., கூட்டணியில் ம.தி.மு.க.,வுக்கு ஒதுக்கப்பட்ட கடையநல்லுார் தொகுதியில் ராஜேந்திரனும், சீர்காழி தொகுதியில் செந்தில் செல்வனும், உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றனர். பின், தி.மு.க.,வில் இணைந்தனர். தற்போது இவர்கள், 'அமைச்சர் பதவி தருவதாக ஆசை காட்டி, அமைச்சர் ஆதவ் அர்ஜுனா வாயிலாக, த.வெ.க.,விடம் எங்களை விற்க ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ முயற்சி செய்தார்' என, லஞ்ச ஒழிப்பு துறையில் புகார் அளித்துள்ளனர்.

டவுட் தனபாலு: இந்த புகாரை, தி.மு.க.,வில் சேர்ந்ததுமே நீங்க தந்திருக்கலாமே... மூணு, நாலு மாசங்களா அமைதியா இருந்துட்டு இப்ப புகார் தந்ததன் பின்னணி குறித்து, 'டவுட்' எழுதே... அதேநேரம், ஆளுங்கட்சி கூட்டணி யில் இருக்கும் ம.தி.மு.க., பொதுச் செயலர் வைகோ மீது, லஞ்ச ஒழிப்பு போலீசார் நடவடிக்கை எடுப்பாங்களா என்பது அதைவிட பெரிய, 'டவுட்!'



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us