PUBLISHED ON : நவ 15, 2026 12:00 AM

த.வெ.க.,வைச் சேர்ந்த, தமிழக வருவாய் துறை அமைச்சர் செங்கோட்டையன்: அடுத்த சட்டசபை கூட்டத்தொடரில், த.வெ.க., அரசு மீது எதிர்க்கட்சியினர் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரப்போவதாக, பத்திரிகையாளர்கள் தான் கூறுகின்றனர்; எதிர்க்கட்சிகளுக்கு அது போன்ற நிலைப்பாடு இருப்பதாக தெரியவில்லை. அப்படியே இருந்தாலும், அதை சந்திக்க த.வெ.க., அரசு தயாராக இருக்கிறது.
டவுட் தனபாலு: உங்க கூட்டணி கட்சிகள் மீதான நம்பிக்கையால் தான், நம்பிக்கை இல்லா தீர்மானத்தை சந்திக்க தயாரா இருப்பதா சவால் விடுறீங்க என்பது, ‘டவுட்’ இல்லாம தெரியுது... இந்த விஷயத்துல காங்., கட்சியை நீங்க, 100 சதவீதம் நம்பலாம்... ஆனா, தி.மு.க., மீது இன்னும் பாசமா இருக்கும் வி.சி.க., – கம்யூ., கட்சிகளை முழுசா நம்பி களத்தில் இறங்கினா, கடைசி நேரத்துல முதலுக்கே மோசம் வந்துடும் என்பதில், ‘டவுட்’டே இல்லை!
lll
ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ: கடந்த தி.மு.க., ஆட்சியில், அனைத்து துறைகளிலும் ஊழல் நடந்துள்ளது. பல நாடுகளில் என்னென்ன ஊழல்களோ நடந்துள்ளன. ஆனால், தமிழகத்தில் அறிவு பொக்கிஷம் வைக்கப்பட வேண்டிய நுாலகத்தில் கூட ஊழல் நடந்துள்ளது. நுாலகத்திலேயே இவ்வளவு ஊழல் நடந்துள்ளது என்றால், மற்ற துறைகளில் எப்படியெல்லாம் ஊழல் செய்திருப்பர்?
டவுட் தனபாலு: கடந்த ஆட்சியில் தி.மு.க., செய்த ஊழல்களில் எல்லாம் உங்களுக்கும் பங்கிருக்கு... அதாவது, ஊழல் பணத்தில் நீங்க பங்கு வாங்கலை என்றாலும், ‘கூட்டணி தர்மம்’ என்ற போர்வையில், அதை அமைதியா வேடிக்கை பார்த்துட்டு இருந்தது தான், மிகப்பெரிய ஊழல் என்பதில், ‘டவுட்’டே இல்லை!
lll
அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி: அ.ம.மு.க., பொதுச்செயலர் தினகரன் தனிக்கட்சி நடத்துகிறார். ‘அவரை அ.தி.மு.க.,வில் சேர்த்துக் கொள்வீர்களா’ என பத்திரிகையாளர்கள் கேட்பது, தேவையில்லாத கேள்வி.
டவுட் தனபாலு: அ.தி.மு.க.,வை பலப்படுத்தணும் என்ற எண்ணம் நியாயமாகவே உங்களுக்கு இருந்தா, ‘இங்கிருந்து பிரிந்து சென்றவர்களை எல்லாம் அரவணைக்க காத்திருக்கிறேன்... எல்லாரும் இங்க வாங்க’ன்னு அல்லவா கூப்பிட்டிருக்கணும்... அதை செய்யாம இப்படி நழுவுவதை பார்த்தால், ‘தினகரன் உள்ளே வந்துட்டா, நம்ம பொதுச்செயலர் பதவிக்கு வேட்டு வச்சிடுவாரோ’ன்னு பயப்படுறீங்களோ என்ற, ‘டவுட்’ தான் வருது!
lll
