தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/டவுட் தனபாலு/‘டவுட்’ தனபாலு: நவ. 20

‘டவுட்’ தனபாலு: நவ. 20

‘டவுட்’ தனபாலு: நவ. 20


PUBLISHED ON : நவ 20, 2026 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : நவ 20, 2026 12:00 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

த.வெ.க.,வைச் சேர்ந்த தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன்: புத்தக கொள்முதலில் ஊழல் நடந்தது, கடந்த தி.மு.க., ஆட்சியில் தான். எங்கள் ஆட்சியில் ஒரு புத்தகம் கூட வாங்கவில்லை. எல்லா புத்தகங்களுமே தி.மு.க., ஆட்சியில் வாங்கப்பட்டவை. போலி நுால்கள் அனைத்தும் தனியாக சேகரிக்கப்பட்டு வருகின்றன. இதுபோன்ற ஊழல், எந்த மாநிலத்திலும் இனி நடக்கக்கூடாது என்பதற்காக, பறிமுதல் செய்யப்பட்ட குப்பை புத்தகங்களை காட்சிப்படுத்த உள்ளோம்.

டவுட் தனபாலு: இதுவரை, தமிழகத்தில் ஊருக்கு ஊர் புத்தக கண்காட்சிகள் நடந்து தான் பார்த்திருக்கிறோம்... வரலாற்றில் முதல் முறையாக போலி புத்தகங்கள் கண்காட்சி நடத்த போறீங்களா...? எத்தனையோ சாதனைகளுக்கு சொந்தம் கொண்டாடும் தி.மு.க.,வினர், போலி புத்தக கண்காட்சிக்கு மட்டும் சொந்தம் கொண்டாட மாட்டாங்க என்பதில், ‘டவுட்’டே இல்லை!

lll

த.வெ.க., பொதுச்செயலரும், தமிழக நீர்வளத்துறை அமைச்சருமான ஆனந்த்: த.வெ.க., நிர்வாகிகள், தொண்டர்கள் கண்ணியத்துடனும், பொறுப்புணர்வுடனும் நடந்து கொள்ள வேண்டும். மாற்றத்திற்காகவே மக்கள் நமக்கு ஓட்டளித்துள்ளனர். கட்சி விதிகளை மீறி செயல்படுவோர் யாராக இருந்தாலும், அவர்களின் பதவி பறிக்கப்படும்.

டவுட் தனபாலு: அது சரி... முதல்ல உங்க கட்சியில் இருக்கிற பாதி பேருக்கு கட்சியின் விதிகள், சட்ட திட்டங்கள், கொள்கைகள் எல்லாம் தெரியுமான்னே, ‘டவுட்’டா இருக்கு... அதனால, கட்சி நிர்வாகிகளை கூப்பிட்டு அவங்களுக்கு பயிற்சி வகுப்பு நடத்தி, எல்லாவற்றையும் விளக்கிட்டு, அப்புறமா எச்சரிக்கை விடுத்தா, ‘டவுட்’ இல்லாம உங்களை பாராட்டலாம்!

lll

மா.கம்யூ., கட்சியின் அரசியல் தலைமை குழு உறுப்பினர் வாசுகி: தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு, இந்த ஆண்டு 29 ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கியும், இதுவரை தமிழக அரசு விடுவிக்கவில்லை. கவுன்சிலர் மற்றும் மேயருக்கான வார்டு மேம்பாட்டு நிதியையும் ஒதுக்கவில்லை. இதனால், உள்ளாட்சிகளில் வளர்ச்சிப் பணிகள் முடங்கியுள்ளன.

டவுட் தனபாலு: சட்டியில் இருந்தால் தானே அகப்பையில் வரும்... மாநில அரசு கடும் நிதி நெருக்கடியில் தள்ளாடிட்டு இருக்கு... தாய்மாமன் தங்க மோதிரம், அண்ணன் சீர் திட்டத்துக்கு எல்லாம் நிதி ஒதுக்கிட்டு, மிச்சம் மீதி இருந்தா மட்டுமே உள்ளாட்சிகள் பக்கம் எட்டி பார்ப்பாங்க என்பதில், ‘டவுட்’டே இல்லை!

lll

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us