PUBLISHED ON : நவ 26, 2026 12:00 AM

அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் உதயகுமார்: தேர்தலுக்கு பின், அ.தி.மு.க.,வை பலவீனப்படுத்த, மூத்த தலைவர்கள், முன்னாள் அமைச்சர்களுக்கு த.வெ.க., பதவி ஆசை காட்டியது. அக்கட்சிக்கு ஆதரவாக மாறிய அ.தி.மு.க., – எம்.எல்.ஏ.,க்கள் நடுவீதிக்கு வந்துள்ளனர். அ.தி.மு.க., ஆட்சி அமைக்க முடியாமல் போனதில், பொதுச்செயலர் பழனிசாமி மீது மட்டும் பழி சுமத்துவதை ஏற்க முடியாது.
டவுட் தனபாலு: வாஸ்தவம் தான்... அ.தி.மு.க., இந்த நிலைக்கு வந்ததற்கு பழனிசாமி மட்டும் காரணமில்லை... அரசிய லில் அவர் என்ன தப்பான முடிவுகள் எடுத்தாலும், ‘ஆமாம் சாமி’ போட்டு முரட்டுத்தனமா, ‘முட்டு’ கொடுத்த உங்களை மாதிரியான, ‘ஜால்ரா’க்களும் முக்கிய காரணம் என்பதில், ‘டவுட்’டே இல்லை!
பத்திரிகை செய்தி: சட்டசபை தேர்தல் தோல்விக்கு பின், தி.மு.க.,வை சீரமைக்க அமைத்த ஆய்வுக்குழு, ‘மாவட்டச் செயலர்கள், 70 வயதுக்கு கீழ் உள்ளவர்களாக இருக்க வேண்டும். உட்கட்சி தேர்தல் நடத்தி, கிளைச் செயலர் முதல் மாவட்டச் செயலர் வரை தேர்வு செய்ய வேண்டும்’ என, அறிக்கை அளித்தது. தி.மு.க., தலைமையின் சீரமைப்பு நட வடிக்கை மீது அதிருப்தி அடைந் துள்ள சென்னை நிர்வாகிகள் பலர், த.வெ.க.,வில் இணைய தீர்மானித்துள்ளனர்.
டவுட் தனபாலு: அது சரி... ஏற்கனவே, பதவி பறிபோகும் அதிருப்தியில், துாத்துக்குடி தெற் கு மாவட்ட தி.மு.க., செயலர் அனிதா ராதாகிருஷ்ணன், கட்சி பணிகள்ல இருந்து ஒதுங்கிட்டாரு... இப்ப, சென்னை நிர்வாகிகளும் மூட்டை கட்ட தயாராகிட்டாங் களா...? சீரமைப்பு நடவடிக்கையே தி.மு.க.,வை சீரழிச்சிடுமோ என்ற, ‘டவுட்’ தான் வருது!
இளைய புரட்சித்தலைவி த்ரிஷா பேரவையின் ஒருங்கிணைப்பாளர் ராஜகோபால்: த்ரிஷா பேரவை சார்பில், ஏழைகளுக்கு சட்ட உதவி முகாம், மருத்துவ முகாம், அரசு நலத்திட்டங்களை கொண்டு சேர்ப்பது உள்ளிட்ட பணிகளில் ஈடுபட உள்ளேன். அரசியலுக்கு த்ரிஷா வந்து, முதல்வர் விஜயுடன் இணைந்து செயல்பட வேண்டும். தேர்தலில் போட்டியிடுவது அவரது விருப்பம். அவரை நேரில் சந்தித்ததில்லை; நான் தொடங்கிய பேரவை குறித்தும் அவருக்கு தெரியாது. த்ரிஷாவை சந்திக்க நேரம் கேட்டும் சந்திக்க முடியவில்லை.
டவுட் தனபாலு: நடிகை த்ரிஷாவுக்கு அரசியல் ஆசை இருப்பதாக அரசல், புரசலா தகவல்கள் வெளியாகுது... அதை வெளிப்படையா தெரிவிக்க தயங்கிட்டு, உங்களை போன்றவங் களை களத்தில் இறக்கி விட்டு த்ரிஷா ஆழம் பார்க்கிறாங்களோ என்ற, ‘டவுட்’ வருதே!
