தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/டவுட் தனபாலு/‘டவுட்’ தனபாலு: நவ. 7

‘டவுட்’ தனபாலு: நவ. 7

‘டவுட்’ தனபாலு: நவ. 7

4


PUBLISHED ON : நவ 07, 2026 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : நவ 07, 2026 12:00 AM

4


4
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

த.வெ.க., கூட்டணியில் இருக்கும் வி.சி.க.,வைச் சேர்ந்த, தமிழக சமூக நீதித்துறை அமைச்சர் வன்னி அரசு: ‘அம்பாசமுத்திரம் தொகுதி பொது வேட்பாளர்’ என, தன்னையே நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சொல்லி கொள்கிறார். அன்று, ‘திராவிட கோட்டையை இடிப்பேன்’ என்றார். இன்று, திராவிட கடப்பாரையை எடுத்து, தமிழ் தேசிய கோட்டையை இடிக்க கிளம்பியுள்ளார். திராவிட பிரியாணிக்காக தட்டேந்தி நிற்கும் சீமான், திராவிடத்திடம் மண்டியிட்டு கிடக்கிறார்.

டவுட் தனபாலு: அது சரி... திராவிட கட்சிகளுடன் தான் உங்க கட்சி, 20 வருஷங்களுக்கும் மேலா கூட்டணியில் இருந்துச்சு என்பதை மறந்துட்டீங்களா... அவ்வளவு ஏன்... இப்ப நீங்க அமைச்சராக காரணமான எம்.எல்.ஏ., பதவியே, தி.மு.க., கூட்டணியில் நின்று ஜெயித்தது தான் என்பதையும் சேர்த்தே மறந்துட்டீங்களோ என்ற, ‘டவுட்’ வருதே!

lll

பத்திரிகை செய்தி: தி.மு.க.,வில் அமைப்பு ரீதியாக உள்ள 77 மாவட்டங்களை, 110 ஆக அதிகரித்து மறுசீரமைப்பு பணிகள் நடந்து வருகின்றன. எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி சிபாரிசால், இளைஞரணியை சேர்ந்த பலருக்கும் மாவட்டச் செயலர் வாய்ப்பு பிரகாசமாகியுள்ளது. அதேநேரம், துணை பொதுச்செயலர் கனிமொழி வசம் உள்ள மகளிரணியினரும், ‘குறைந்தபட்சம் 10 பேருக்கு மாவட்டச் செயலர் பதவி தர வேண்டும்’ என வலியுறுத்தியுள்ளனர்.

டவுட் தனபாலு: பெண்கள் ஓட்டுகளால தான், த.வெ.க., ஆட்சியை பிடிச்சிருக்கு என்பது தான், ‘டவுட்’ இல்லாத உண்மை... அந்த வகையில், மகளிர் ஓட்டுகளை வாங்கணும் என்றால், தி.மு.க., நிர்வாகத்தில், அவங்களுக்கும் அதிகாரத்தை பகிர்ந்து வழங்கணும் என்பதிலும், ‘டவுட்’டே இல்லை!

lll

விஷ்வ ஹிந்து பரிஷத் தமிழக மாநில அமைப்பாளர் செந்தில்குமார்: திண்டுக்கல் மாவட்டம், பழனி முருகன் கோவிலில், தங்க ரதம் இழுக்கும் கட்டணம் 2,000த்தில் இருந்து, 2,500 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. தி.மு.க., ஆட்சியில் கூட இதுபோன்று கட்டணம் உயர்த்தப்படவில்லை. இதனால், சாமானிய பக்தர்களால் நேர்த்திக்கடனை நிறைவேற்ற முடியாமல் போகும். முதல்வர் விஜய் தலையிட்டு, கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும்.

டவுட் தனபாலு: தங்க ரதம் என்றால் பணக்காரர்கள் மட்டும் தான் இழுப்பாங்கன்னு, அறநிலையத் துறை அதிகாரிகள் முடிவு பண்ணிட்டாங்களா...? எத்தனையோ ஏழைகளும், நேர்த்திக்கடனுக்காக தங்க ரதம் இழுப்பாங்க என்பதை உணர்ந்து, கட்டணத்தை குறைக்க நடவடிக்கை எடுக்கணும் என்பதில், ‘டவுட்’டே இல்லை!

lll

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us