தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/டவுட் தனபாலு/‘டவுட்’ தனபாலு: நவ. 8

‘டவுட்’ தனபாலு: நவ. 8

‘டவுட்’ தனபாலு: நவ. 8


PUBLISHED ON : நவ 08, 2026 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : நவ 08, 2026 12:00 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தமிழக காங்.,கைச் சேர்ந்த ராஜ்யசபா எம்.பி., பிரவீன் சக்கரவர்த்தி: கூட்டணி கட்சிகளுக்கு தகுந்த மரியாதை, மதிப்பு, பங்கு, எல்லாருக்கும் எல்லாமும் என்பது, தமிழகத்தில் இப்போது தான் முதல் முறை. வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தால் தான் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதாக கருத்து உள்ளது. அதற்கும், தமிழக தேர்தல் முடிவுகளுக்கும் சம்பந்தம் இல்லை.

டவுட் தனபாலு: உங்க கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ‘வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தத்துக்கு பிறகு நடந்த தேர்தல்களை எல்லாம் ரத்து செய்யணும்’னு சொல்லிட்டு இருக்காரு... உங்க கருத்தை பார்க்கிறப்ப, கார்கே சொல்றது அபத்தம் என்பது, ‘டவுட்’ இல்லாம தெரியுது!

lll

பத்திரிகை செய்தி: தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி, நகர்ப்புற உள்ளாட்சிகளில் இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட பதவிகள் உள்ளன. இவற்றில், ஊரக உள்ளாட்சி பிரதிநிதிகளின் பதவிக்காலம் முடிந்து விட்டது. நகர்ப்புற உள்ளாட்சி பிரதிநிதிகளின் பதவிக்காலம், வரும் பிப்ரவரி மாதம் நிறைவு பெறுகிறது. இதனால், வரும் மார்ச் மாதம் உள்ளாட்சி தேர்தலை நடத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

டவுட் தனபாலு: தீபாவளி, பொங்கல் பண்டிகை முடிஞ்சதும், இந்த தேர்தல் திருவிழா துவங்க இருக்கு... தோற்று போய் விரக்தியில் இருக்கும் தி.மு.க., – அ.தி.மு.க.,வுக்கும், வெற்றி களிப்பில் இருக்கும் த.வெ.க.,வுக்கும் இந்த திருவிழா ரொம்பவே முக்கியம் என்பதில், ‘டவுட்’டே இருக்காது... இந்த தேர்தலிலும் த.வெ.க., ஜெயிச்சிட்டா, ரெண்டு திராவிட கட்சிகளின் எதிர்காலமும் மிகப்பெரிய கேள்விக்குறியாகிடும் என்பதிலும், ‘டவுட்’டே இல்லை!

lll

தமிழகத்தைச் சேர்ந்த, ஹிந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத்: பள்ளி கல்வித் துறையில் ஊழல் செய்த தி.மு.க., முன்னாள் அமைச்சர் மகேஷ் கைது செய்யப்பட்டுள்ளார். மற்ற முன்னாள் அமைச்சர்களான நேரு உள்ளிட்டோர் மீது நீதிமன்றம் உத்தரவிட்டும், வழக்குப்பதிவு செய்யாமல் முந்தைய தி.மு.க., ஆட்சியில் ஏமாற்றினர். தற்போதைய அரசு, இவ்வழக்குகளை தீவிரப்படுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்; அவர்களது சொத்துக்களை பறிமுதல் செய்ய வேண்டும்.

டவுட் தனபாலு: நீங்க சொல்றது நுாற்றுக்கு நுாறு சரி... லஞ்ச வழக்கில் முன்னாள் அமைச்சர்களை கைது செய்றப்பவே, அவங்களது சொத்துக்களையும் சேர்த்து பறிமுதல் பண்ணிடணும்... லஞ்ச வழக்கில் நிரபராதின்னு தீர்ப்பு வந்துட்டா, சொத்துக்களை திருப்பி குடுத்துடலாம்... இது அமலுக்கு வந்தா, ‘டவுட்’டே இல்லாம பெருமளவு லஞ்சம் குறைஞ்சிடும்!

lll

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us