தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/டவுட் தனபாலு/‘டவுட்’ தனபாலு: நவ. 9

‘டவுட்’ தனபாலு: நவ. 9

‘டவுட்’ தனபாலு: நவ. 9

4


PUBLISHED ON : நவ 09, 2026 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : நவ 09, 2026 12:00 AM

4


4
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

த.வெ.க.,வைச் சேர்ந்த, தமிழக மின் துறை அமைச்சர் நிர்மல்குமார்: த.வெ.க., – எம்.எல்.ஏ.,க்களை, எப்படியாவது விலைக்கு வாங்கி, பா.ஜ., பின்புலத்துடன் தி.மு.க.,வும், அ.தி.மு.க.,வும் சேர்ந்து ஆட்சி அமைக்க நினைக்கின்றனர். தி.மு.க.,வினரிடம் கோடிக்கணக்கில் பணம் இருப்பதால், எங்கள் எம்.எல்.ஏ.,க்களை விலைக்கு வாங்க முயற்சிக்கின்றனர். ஏற்கனவே, 70 கோடி ரூபாய் வரை, ‘ஆபர்’ கொடுத்து கைதாகினர். தற்போது, பா.ஜ., – அ.தி.மு.க., – தி.மு.க., மூன்றும் சேர்ந்து சதி செய்கின்றன.

டவுட் தனபாலு: தி.மு.க., – அ.தி.மு.க.,வுடன் பா.ஜ.,வையும் சேர்த்து, ‘கோர்த்து’ விடுறீங்களே... மத்திய அரசுடன் இணக்கமாக போகணும்னு உங்க தலைவரான முதல்வர் விஜய் நினைக்கிறாரு... நீங்க அரசியலுக்காக பா.ஜ., மீது குற்றஞ்சாட்டுவது, முதல்வரின் முயற்சிக்கு முட்டுக்கட்டையா போயிடும் என்பதில், ‘டவுட்’டே இல்லை!

lll

த.வெ.க., கூட்டணியில் இருக்கும் காங்கிரசை சேர்ந்த, தமிழக உயர்கல்வித் துறை அமைச்சர் விஸ்வநாதன்: த.வெ.க., ஆட்சியை கவிழ்க்க, தி.மு.க., மற்றும் அ.தி.மு.க.,வினர் குதிரை பேரம் நடத்துவதாக, த.வெ.க., – எம்.எல்.ஏ., முஸ்தபா கூறியிருக்கிறார். தி.மு.க.,வினர் தினமும் இதே திட்டத்தில் செயல்படுவதால், குதிரை பேரம் தொடர்ந்து நடக்கிறது. அ.தி.மு.க.,வில் இருந்து த.வெ.க.,வுக்கு ஆறு எம்.எல்.ஏ.,க்கள் வந்ததற்கு காரணம், அ.தி.மு.க., தலைமை மீது நம்பிக்கை இல்லாமை தான்.

டவுட் தனபாலு: அது சரி... ‘குதிரை பேரம் என்றால், ஆட்சியை பிடிக்கிறதுக்காக, ஆளுங்கட்சி மட்டுமே செய்ய வேண்டிய வேலை... ஆட்சியை கவிழ்க்கிறதுக்காக, எதிர்க்கட்சிகள் குதிரை பேரம் நடத்தக்கூடாது’ன்னு சொல்லாம சொல்றீங்களோ என்ற, ‘டவுட்’ தான் வருது!

lll

அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் உதயகுமார்: த.வெ.க., – எம்.எல்.ஏ.,க்களை விலைக்கு வாங்க அ.தி.மு.க., திட்டமிட்டுள்ளதாக அமைச்சர் நிர்மல்குமாரும், அ.தி.மு.க.,வினர் பேரம் பேசுவதாக முஸ்தபா எம்.எல்.ஏ.,வும் கூறிஉள்ளனர். அ.தி.மு.க., பெயரை தேவையின்றி இழுப்பதை நிர்மல்குமாரும், த.வெ.க., – எம்.எல்.ஏ.,க்களும் உடனடியாக நிறுத்த வேண்டும். ஊழலுக்கு எதிராக தொடங்கப்பட்ட அ.தி.மு.க.,வுக்கு, குறுக்கு வழியில் ஆதாயம் தேட வேண்டிய அவசியம் இல்லை.

டவுட் தனபாலு: தி.மு.க.,வின் ஊழலை எதிர்த்து தான், அ.தி.மு.க.,வை எம்.ஜி.ஆர்., துவக்கினார் என்பதில், ‘டவுட்’டே இல்லை... அதேநேரம், முதல்வர் பதவியில் இருந்தப்பவே ஊழல் வழக்கில் சிறைக்கு போனது, இந்தியாவிலேயே உங்க முன்னாள் தலைவி ஜெயலலிதா மட்டுமே என்பதை மறந்துட்டீங்களோ என்ற, ‘டவுட்’தான் வருது!

lll

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us