PUBLISHED ON : செப் 27, 2024 12:00 AM

தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி: அமைச்சர்உதயநிதிக்கு, துணை முதல்வர்ஆவதற்கான எல்லா தகுதிகளும்உள்ளன. அமைச்சர் உதயநிதி இளமைப் பருவத்தில் இருந்தே தி.மு.க., இயக்கத்திற்காக உழைத்தவர்; இளைஞர்களின் வழிகாட்டியாக உள்ளார்.
டவுட் தனபாலு: அட, உங்க மகன் கவுதம சிகாமணி கூட தான், இளமைப் பருவத்தில் இருந்தே தி.மு.க.,வுக்காக உழைச்சிட்டு இருக்காரு... எம்.பி.,யாகவும் அஞ்சு வருஷம்மக்களுக்கு அரும்பாடு பட்டிருக்காரு... அவருக்கெல்லாம்துணை முதல்வர் ஆகும் தகுதி இல்லைன்னு சொல்ல வர்றீங்களாஎன்ற, 'டவுட்' வருதே!
பத்திரிகை செய்தி: இதயம்,சிறுநீரகம் உள்ளிட்டநோய்களுக்கான மாத்திரைகளுக்கு, அரசு மருத்துவமனைகளில் தட்டுப்பாடு இருப்பதால்,வெளிமருந்தகங்களில் வாங்கிக் கொள்ள நோயாளிகள் அறிவுறுத்தப்படுகின்றனர். மேலும், 250 மி.கி., அளவு எடுத்துக்கொள்ள டாக்டர்கள் பரிந்துரை செய்தால், 500 மி.கி.,மாத்திரை கொடுத்து, அவற்றை இரண்டாக உடைத்து சாப்பிட சொல்கின்றனர். சிறிய அளவிலான மாத்திரைகளை உடைக்க முடியாமல், சில நோயாளிகள் முழுதாக சாப்பிடுகின்றனர்.
டவுட் தனபாலு: 'மக்களை தேடி மருத்துவம்; வரும் முன் காப்போம், இன்னுயிர் காப்போம்'னு ஏகப்பட்ட திட்டங்களை அறிவிச்சாங்களே... ஆனா, சாதாரண மருந்து, மாத்திரைகளையே வினியோகம் பண்ண முடியாமல், வெற்று விளம்பரங்கள்லயே சுகாதாரத்தை பேணிட்டு இருக்காங்க என்பது, 'டவுட்'டே இல்லாம தெரியுது!
பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்மகேஷ்: வி.சி., கட்சியின் துணை பொதுச்செயலர் ஆதவ் அர்ஜுனாவின் கருத்து,'அவருடைய தனிப்பட்ட கருத்து' என்று, அக்கட்சித் தலைமையே தெரிவித்துள்ளது. கட்சித் தலைவர் திருமாவளவன் இதை கண்டித்ததுடன், 'முதிர்ச்சியற்ற கருத்து' என்று கட்சியின் மாநில நிர்வாகிகள்வாயிலாகவும் கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளார். அதனால், அதுகுறித்து நான் எதுவும் கருத்து சொல்லவிரும்பவில்லை.
டவுட் தனபாலு: உங்க கட்சியில,கூட்டணிக்கு குந்தகம் விளைவிக்கிற மாதிரி பேசுறவங்களை,'சஸ்பெண்ட்' பண்ணுவாங்க... ஆனா, வி.சி., கட்சியில் கண்டிப்போட நிறுத்திக்கிட்டாங்களே... இதனால, ஆதவ்வை பேசவிட்டு ஆழம் பார்க்கிறதேஅவங்க தலைமை தானோ என்ற, 'டவுட்' உங்களுக்கு வரலையா?

