தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/டவுட் தனபாலு/ 'டவுட்' தனபாலு

'டவுட்' தனபாலு

'டவுட்' தனபாலு


PUBLISHED ON : அக் 03, 2024 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 03, 2024 12:00 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் எஸ்.பாலசந்திரன்: தமிழகம், கேரளா, கர்நாடகா மற்றும் ஆந்திராவின் ஒரு பகுதி ஆகியவற்றை சேர்த்து தான், வடகிழக்கு பருவமழை கணிக்கப்படுகிறது. இதன்படி, இம்மாதம் மூன்றாவது வாரத்தில், வடகிழக்கு பருவமழை துவங்க வாய்ப்பு உள்ளது. தமிழகத்தின் வடமாவட்டங்களில் இயல்பை விட அதிகமாகவும், தென் மாவட்டங்களில், இயல்பை விட குறைவாகவும் மழை பெய்ய வாய்ப்புள்ளது.

டவுட் தனபாலு: போன வருஷம் பெய்த வடகிழக்கு பருவமழையின் பாதிப்புகளையே, சென்னை உள்ளிட்ட வடமாவட்ட மக்கள் இன்னும் மறக்கலை... அதேபோன்ற பாதிப்பு இந்த பருவ மழையிலும் இருக்கலாம் என்ற எச்சரிக்கையை இப்பவே விடுத்துட்டீங்க... இந்த முறையாவது, தமிழக அரசு உஷாராக இருந்து மக்களை காக்கணும் என்பதில், 'டவுட்'டே இல்லை!



அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி: அ.தி.மு.க.,வின் ஓட்டு, 10 முதல் 15 சதவீதம் குறைந்து விட்டது. கட்சியின் வயது முதிர்ந்த தொண்டர்கள் இறந்ததால், கட்சியின் ஓட்டு சதவீதம் குறைந்துள்ளது. தற்போது, 40 சதவீதம் இளைஞர்கள் உள்ளனர். நாம் இழந்த ஓட்டுகளை பெற, இளைஞர்களை நோக்கி அ.தி.மு.க.,வை கொண்டு செல்ல வேண்டும். அதற்காக, கட்சியில் புதிய இளைஞர்களை அதிக அளவில் சேர்க்க வேண்டும்.

டவுட் தனபாலு: பவள விழாவை கொண்டாடும் தி.மு.க.,வில், காலத்துக்கு ஏற்ப புதிய உறுப்பினர்களை சேர்க்கிறதுல ஆர்வம் மற்றும் துடிப்புடன் அந்த கட்சி நிர்வாகிகள் பணிபுரிவாங்க... உங்க கட்சியில ஜெ.,க்கு பிறகு, உறுப்பினர் சேர்க்கையில உங்க கட்சி நிர்வாகிகள் ஆர்வம் காட்டாம போனது தான் இந்த பின்னடைவுக்கு காரணம் என்பதில், 'டவுட்'டே இல்லை!



ம.தி.மு.க., முதன்மை செயலர் துரை வைகோ: உதயநிதிக்கு வாரிசு அடிப்படையில், துணை முதல்வர் பொறுப்பு வழங்கப்படவில்லை. அவருடைய திறமை மற்றும் செயல்பாடு காரணமாகவே அவருக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

டவுட் தனபாலு: அதுவும் சரிதான்... உங்களுக்கு எந்த திறமை, செயல்பாடுகள் அடிப்படையில, உங்க தந்தை பதவியை வாரி வழங்கினாரோ, அதே அடிப்படையில தான், உதயநிதிக்கும் ஸ்டாலின் பதவி வழங்கியிருக்கார் என்பதில், 'டவுட்'டே இல்லை!



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us