உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : செப் 30, 2026 12:00 AM

அ நிறம் | அளவு
துாத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் தி.மு.க., - எம்.எல்.ஏ., மார்க்கண்டேயன், சமீபத்தில் விளாத்திகுளத்தில் பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறுகையில், 'மக்களின் அன்றாடப் பிரச்னைகள் எதுவும் தீர்க்கப்படவில்லை. மக்கள் அச்சப்பட்டு கொண்டிருக்கின்றனர். அவர்களின் அச்சத்தைப் போக்குவது த.வெ.க., அரசின் கடமை; இல்லை என்றால், அரசிற்கு கடிவாளம் போடும் விதமாக எதிர்க்கட்சியான நாங்கள் செயல்படுவோம்' என்றார்.
இதை கேட்ட நிருபர் ஒருவர், 'முதல்ல ஏறுக்கு மாறா பேசும் இவர், ஆர்.எஸ்.பாரதி போன்றவங்களுக்கு, இவங்க தலைமை கடிவாளம் போடணும்' என முணுமுணுக்க, சக நிருபர்கள் சிரித்தபடியே அங்கிருந்து நகர்ந்தனர்.
