PUBLISHED ON : அக் 01, 2026 12:00 AM

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் பேரூராட்சியில் இரண்டு பொது மயானங்கள் உள்ளன. பேரூராட்சி தலைவராக தி.மு.க.,வைச் சேர்ந்த சேங்கைமாறன் உள்ளார். இதற்கு முன், இவரது மனைவி வசந்தி தலைவராக இருந்தார்; தற்போது கவுன்சிலராக உள்ளார்.
மயானங்களில், பேரூராட்சி சார்பில், 150 தென்னை மரங்கள் வளர்க்கப்பட்டு வருகின்றன. இவற்றில், 45 நாட்களுக்கு ஒரு முறை, 2,000 தேங்காய்கள் வரை பறிக்கப்படும். அவற்றை பேரூராட்சி கணக்கில் வரவு வைக்காமலும், பொது ஏலம் விடாமலும், சேங்கை மாறன் தனது வீட்டிற்கு எடுத்து செல்வதாக, சமீபத்தில் நடந்த பேரூராட்சி கூட்டத்தில் த.மா.கா., கவுன்சிலர்கள் குற்றஞ்சாட்டினர்.
இதற்கு பதிலளித்த வசந்தி, 'நாங்க தான் அந்த தென்னை மரங்களை வச்சோம்... அதனால், தேங்காய்கள் எங்களுக்கு தான் சொந்தம்' என்றார்.
இதை கேட்ட த.மா.கா., கவுன்சிலர்கள், 'சுடுகாட்டில் கூட மோசடி செய்வீங்களா?' என, தலையில் அடித்தபடியே கிளம்பினர்.
