sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 14, 2025 ,கார்த்திகை 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

தினம் தினம்

/

டவுட் தனபாலு

/

'டவுட்' தனபாலு

/

'டவுட்' தனபாலு

'டவுட்' தனபாலு

'டவுட்' தனபாலு


PUBLISHED ON : அக் 09, 2024 12:00 AM

Google News

PUBLISHED ON : அக் 09, 2024 12:00 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அ.தி.மு.க., பொருளாளர்திண்டுக்கல் சீனிவாசன்: தி.மு.க.,வினர் 30,000 கோடி ரூபாய் கொள்ளையடித்து, எங்குவைப்பது என தெரியாமல்,வெளிநாட்டில் முதலீடு செய்துள்ளது குறித்து, அமைச்சர்தியாகராஜன் பேசிய ஆடியோ உள்ளது. பழனிசாமி ஆட்சிக்கு வந்தால், அவர்கள் அனைவரும்சிறைக்கு செல்வர்.

டவுட் தனபாலு: தி.மு.க.,வினரும்ஆட்சிக்கு வரும் முன், 'அ.தி.மு.க.,வினர் கொள்ளையடித்து சேர்த்ததை மீட்டு, அவங்களை சிறைக்கு அனுப்புவோம்'னு வாக்குறுதி தந்தாங்க... நீங்களும்அதையே சொல்றீங்க... ரெண்டு திராவிடக் கட்சிகளும் பேசிவச்சுக்கிட்டு செயல்படுறீங்களோ என்ற, 'டவுட்' தான் வருது!



பத்திரிகை செய்தி: நடிகர் விஜயின், தமிழக வெற்றிக் கழகம் முதல் மாநில மாநாட்டில் பங்கேற்க, மதுரையில் வெற்றிலை,பாக்கு வைத்து அக்கட்சியினர்மக்களுக்கு வழங்கியஅழைப்பிதழில், தி.மு.க.,வைசீண்டி உள்ளனர். அழைப்பிதழில்,'நம்பி வாங்க; நல்லாட்சி தரப்போறோம் நாங்க... வாரிசு அரசியல் செய்ய மாட்டோம் நாங்க.விடியல் நாடகம் போதுங்க; விட்ற மாட்டோம் நாங்க. 50 ஆண்டு திராவிட அரசியல் போதும்... திராணியுள்ளதமிழகம் அமைய, தயங்காமல் ஆதரவு தாங்க...' என்ற வரிகள் சர்ச்சையை கிளப்பி உள்ளன.

டவுட் தனபாலு: பெரிய பெரிய தலைவர்கள் இருந்த தி.மு.க.,1949ல் உதயமானாலும், 18 வருஷம் கழிச்சு, 1967ல் தான் ஆட்சியை பிடிச்சது... ஆனா, நேத்து கட்சி துவங்கிட்டு, 'நாளைக்கே நல்லாட்சிதருவோம்'னு சொல்ற உங்க அபார தன்னம்பிக்கையை, 'டவுட்'டேஇல்லாம பாராட்டலாம்!





தமிழக சட்டத் துறை அமைச்சர்ரகுபதி: கடந்த 2016ல், பூரண மதுவிலக்கு என்று தி.மு.க., தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருப்பதாக கூறுகின்றனர்.அன்றைய தேர்தலில் இந்த கருத்தை கூறியதாலே, 20 - 30 இடங்கள் இழந்தோம் என்ற கருத்து உள்ளது. 'மதுவிலக்கைஅமல்படுத்துவோம்' என கூறியதால் திருப்பூர், ஈரோடு, கோவை உள்ளிட்ட இடங்களில்உள்ள தொழிலாளர்கள், தி.மு.க.,வுக்கு எதிராக ஓட்டளித்தனர்.

டவுட் தனபாலு: 'ஒட்டுமொத்த தமிழகத்துலயும், கொங்கு மண்டல தொழிலாளர்கள் தான் பெரிய குடிகாரர்கள்'னு சொல்லாம சொல்றீங்களோ என்ற, 'டவுட்'தான் வருது!








      Dinamalar
      Follow us