PUBLISHED ON : அக் 26, 2024 12:00 AM

அ.ம.மு.க., பொதுச்செயலர் தினகரன்: திருமாவளவன், தி.மு.க.,விடம் நேரடியாக பேச முடியாமல் மாநாடு நடத்தி அழுத்தம் கொடுத்தார். ஆனால், தேர்தல் வரும்போது எம்.எல்.ஏ., - எம்.பி., சீட்டுகளுக்காக சமரசம் செய்து கொள்கின்றனர். அதனால், அவர்கள் கூட்டணியில் இருந்து வெளியே வரமாட்டார்கள். இனி, கனவில் தான் பழனிசாமி முதல்வராக முடியும். தமிழகத்தில், 2026ல் எங்களது தே.ஜ., கூட்டணி ஆட்சியே அமையும்.
டவுட் தனபாலு: உங்க ஆசைப்படியே, தே.ஜ., கூட்டணிஆட்சியே அமையுதுன்னுவச்சுப்போம்... அந்த ஆட்சியில, முதல்வர் பதவி யாருக்கு...? அண்ணாமலை, அன்புமணி, நீங்கன்னு நிறைய தலைவர்கள் வரிசைகட்டி நிக்குறீங்களே... ஒருவேளை ஆட்சிக்கு வந்த பிறகு, சீட்டு குலுக்கி போட்டு தேர்வு செய்வீங்களோ என்ற, 'டவுட்' தான் வருது!
பா.ஜ., செய்தி தொடர்பாளர்கவுரவ் பாட்டியா: வயநாடு லோக்சபா தொகுதி காங்கிரஸ்வேட்பாளரான பிரியங்கா, பொறுப்பாளராக இருந்த கிழக்குஉ.பி.,யில் அக்கட்சி, ஒரே ஒரு தொகுதியில் மட்டுமே வென்றது.இருப்பினும், அவரை வேட்பாளர் ஆக்கி உள்ளனர். இதன் வாயிலாக,தகுதி படைத்தவர்கள் வீழ்த்தப்பட்டுள்ளனர்; வாரிசு அரசியல் வெற்றி பெற்றுள்ளது என்பது தெளிவாகிறது.
டவுட் தனபாலு: 'வயநாடுக்கு பிரியங்கா தவிர, வேற யாரையும்நினைச்சு கூட பார்க்க முடியாது'ன்னு அவரது சகோதரர் ராகுல் திட்டவட்டமா சொல்லிட்டாரே... வாரிசு அரசியலுக்கு முன்னாடி, தகுதி, திறமை எல்லாம் கால் காசு கூட பெறாது என்பதில், 'டவுட்'டே இல்லை!
வி.சி., கட்சி தலைவர் திருமாவளவன்: தேசிய இனத்தின் அடிப்படையில் தமிழர், திராவிடர்என பாகுபடுத்தி சீமான் கூறுவதுசரியான விவாதம் இல்லை. திராவிடமும், தமிழர் என்பதும் ஒன்றோடு ஒன்று தொடர்புடையவை; ஆனால், வெவ்வேறானவை. திராவிட இனம் என்பது தேசிய இனம் அல்ல, மரபினம்; தமிழ் என்பது மரபினம் அல்ல, தேசிய இனம். தி.மு.க.,வை எதிர்க்கிறோம் என்ற அடிப்படையில், ஒட்டுமொத்த திராவிட அடையாளத்தையும் எதிர்ப்பதுஇனவாதத்தில் தான் முடியும். மக்களை நாம் குழப்பக் கூடாது.
டவுட் தனபாலு: மக்களை குழப்பக் கூடாதுன்னு சொல்லிட்டு,நீங்க தான், பழம்பெரும் நடிகர்விசு மாதிரி போட்டு குழப்புறீங்க...திராவிடரா இருக்கிறதோ, தமிழராஇருக்கிறதோ இங்க முக்கியமில்லை... முதல்ல, மனிதநேயமுள்ள மனுஷனா இருக்கணும்... அப்புறம் தான், இனம், மொழி அடையாளம் எல்லாம் என்பதில், 'டவுட்'டே இல்லை!