PUBLISHED ON : நவ 05, 2024 12:00 AM

தமிழக வெற்றிக் கழக தலைவர்விஜய்: நமக்கு தேசிய அளவில்பா.ஜ., மாநில அளவில் தி.மு.க.,பொது எதிரிகள் என்பதை மாநாட்டில் விளக்கி விட்டோம். எனவே, மத்திய, மாநில அரசுகளின் குறைகளை சுட்டிக்காட்டுவோம். ரஜினி வாழ்த்து தெரிவித்தது மகிழ்ச்சி அளிக்கிறது.அவரது ரசிகர்களையும், நாம் அரவணைக்க வேண்டும்; சீமானைபொருட்படுத்த வேண்டாம். அரசியல் ரீதியாக அவரை யாரும் விமர்சிக்க வேண்டாம்.
டவுட் தனபாலு: அது சரி... 'ஆகப்பெரும் கட்சிகளான பா.ஜ.,வும், தி.மு.க.,வும் தான் நம்ம எதிரிகள்... சீமான் போன்ற சின்ன கட்சிகளை விமர்சித்து, நம்ம சக்தியை வீணாக்க வேண்டாம்'னு முடிவு பண்ணிட்டீங்களோ என்ற, 'டவுட்'தான் வருது!
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான்: சேலத்தில் நகைக்கடை திறக்க வந்த நயன்தாராவுக்கு, 4 லட்சம்பேர் கூடினர். விஜயகாந்திற்கு மதுரையில் கூடாத கூட்டமா, விஜய்க்கு கூடி விட்டது? எனக்கு, 36 லட்சம் பேர் ஓட்டளித்துஉள்ளனர். அந்த 36 லட்சம் பேரும் என் கூட்டம். இதை என்னால் அடித்துக் கூற முடியும்.ஆனால், மாநாட்டுக்கு வந்தோர்எல்லாம் என் ஆதரவாளர்கள், ரசிகர்கள் என, விஜயால் கூற முடியுமா?
டவுட் தனபாலு: விஜய்க்கு சவால் விடுவது இருக்கட்டும்... உங்க கூட்டத்துல, 36 லட்சம் பேர் இருக்காங்கன்னு சொல்றீங்களே...நீங்களும் ஒரு மாநாடு நடத்துங்க...அதுல, 36 லட்சம் பேர் கூட வேண்டாம்... அதுல, 10ல ஒரு பங்கு கூட்டமாவது திரண்டால்,'டவுட்'டே இல்லாம உங்க வாதத்தை ஏத்துக்கலாம்!
ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் தலைவரும், அம்மாநில முதல்வருமான ஹேமந்த் சோரன்:ஜார்க்கண்ட் மாநிலத்துக்கு தேர்தல் பிரசாரத்திற்காக வந்துள்ளபிரதமர் மோடி மற்றும் மத்தியஅமைச்சர் அமித் ஷா ஆகியோரிடம் இரு கரம் கூப்பி கேட்கிறேன்... மாநிலத்தின்வளர்ச்சி பணிகளுக்கு தேவையான நிதியை வழங்கி உதவுங்கள்; எங்களால் நிர்வாகத்தை நடத்த முடியவில்லை.
டவுட் தனபாலு: தமிழக அரசுக்கும்தான் மத்திய அரசு சரியாக நிதி தருவதில்லை... ஆனாலும், சமாளிக்கத்தானே செய்றாங்க... 'உங்களால நிர்வாகம்பண்ண முடியாட்டி, வீட்டுக்கு கிளம்புங்க... நாங்க பார்த்துக்கிறோம்'னு பா.ஜ.,வினர் பதிலடிதந்தா, என்ன பண்ணுவீங்க என்ற, 'டவுட்' வருதே!

