PUBLISHED ON : நவ 10, 2024 12:00 AM

தமிழக துணை முதல்வர் உதயநிதி: வரும் 2026 சட்டசபை தேர்தல், மிக முக்கியமான தேர்தலாக இருக்கப் போகிறது. களப்பணி தான்நம் கட்சியினரை மெருகேற்றும்; வெளி உலகுக்கு காட்டும். நம் கட்சியினர் ஒவ்வொருவராலும், 500 ஓட்டுகளை திரட்ட முடியும் என்ற சூழல் வந்து விட்டால், உங்களை யாராலும் அசைக்க முடியாது. அதற்கான செயல் திட்டத்தை வகுத்துக் கொள்ளுங்கள்.கடமையை மட்டும் செய்துகொண்டேஇருங்கள். தக்க நேரத்தில், உங்களுக்கான அங்கீகாரம் வந்து சேரும்.
டவுட் தனபாலு: அது சரி... தொண்டர்கள், அவங்க கடமையைசெய்துட்டே இருப்பதால் தான், நீங்கஇப்ப ஆட்சியில இருக்கீங்க... ஆனாலும், எம்.எல்.ஏ., அமைச்சர்,துணை முதல்வர்னு, மூணே வருஷத்துல உங்களுக்கு கிடைத்தஅங்கீகாரம், எந்த தொண்டருக்காவதுகிடைக்குமா என்பது, 'டவுட்' தான்!
பத்திரிகை செய்தி: தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை,அரசியல் தொடர்பான உயர்கல்விபயில, ஆக., 28ல் பிரிட்டன் சென்றார். மூன்று மாத பயணத்தைமுடித்து, வரும் 28ம் தேதி தமிழகம் திரும்புகிறார். கடந்த இருமாதங்களாக, பா.ஜ.,வில் புதிய உறுப்பினர் சேர்க்கை பணி நடந்து வருகிறது. இந்த பணியில்,நிர்வாகிகள் முழுவீச்சில் ஈடுபடவில்லை என்ற புகார்கள் எழுந்தன.இம்மாத இறுதியில் அண்ணாமலைநாடு திரும்புவதால், உறுப்பினர்சேர்க்கை தீவிரப்படுத்தப்படும்என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
டவுட் தனபாலு: அண்ணாமலைஇல்லாம, தமிழக அரசியல் களமும்மந்தமா தான் இருக்குது... அதனால,அவர் நாடு திரும்பியதும், ஆளுங்கட்சிக்கு மட்டுமல்ல; சொந்த கட்சியினருக்கும் சூடு போடுவார் என்பதில், 'டவுட்'டே இல்லை!
ஓய்வு பெற்ற ஏ.டி.எஸ்.பி., அனுசுயா: ராஜிவை கொல்வதற்காகவிடுதலை புலிகள் நடத்திய குண்டுவெடிப்பில், என் இடது கை முழுமையாக பாதிக்கப்பட்டது. ராஜிவ் குடும்பத்தினர் எனக்கு ஆதரவாக இருப்பர் என்று நினைத்து, காங்.,கில் சேர்ந்தேன்.ஆனால், வயநாடு தொகுதியில் ராகுல் பிரசாரம் செய்யும்போது, வேலுார் சிறைக்கு சென்று, நளினியை பிரியங்கா சந்தித்ததுகுறித்து பேசியுள்ளார். நளினிக்காக, தானும் குடும்பத்தினரும் மனவேதனை பட்டதாகவும் தெரிவித்திருக்கிறார். அவர்களைநம்பி, இனி பிரயோஜனம் இல்லை.எனவே, காங்கிரசில் இருந்து விலகி விட்டேன்.
டவுட் தனபாலு: 'பகைவனுக்கு அருள்வாய் நன்னெஞ்சே'ன்னு பாரதியார் சும்மாவா பாடியிருக்காரு... உங்களால வயநாடுல போய்,100 ஓட்டுகளை வாங்கித்தர முடியுமா... ராகுல் இப்படி உருக்கமாபேசி, அங்கு பல லட்சம் ஓட்டுகளை அள்ளிடுவார் என்பதில், 'டவுட்'டே இல்லை!