sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

தினம் தினம்

/

டவுட் தனபாலு

/

'டவுட்' தனபாலு

/

'டவுட்' தனபாலு

'டவுட்' தனபாலு

'டவுட்' தனபாலு

6


PUBLISHED ON : டிச 05, 2024 12:00 AM

Google News

PUBLISHED ON : டிச 05, 2024 12:00 AM

6


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஹிந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம்: வங்கதேசத்தில் சிறுபான்மையாக உள்ள ஹிந்துக்கள் மீதும், கோவில்கள் மீதும் வன்முறை ஏவி விடப்பட்டுள்ளது. வங்கதேசத்தில் ஹிந்துக்கள் மீதான தாக்குதல் தொடரும் பட்சத்தில், அந்நாட்டை நம் நாட்டுடன் இணைக்க, மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

டவுட் தனபாலு: என்னமோ, 'நெல்லை எக்ஸ்பிரஸ்ல எக்ஸ்ட்ரா ரெண்டு பெட்டிகளைஇணைங்க'ன்னு கேட்கிற மாதிரி இவ்வளவு ஈசியா கேட்கிறாரே...ஏடாகூடமா பேசுறது எப்படின்னு,தனியா 'ரூம்' போட்டு யோசிப்பாரோஎன்ற, 'டவுட்'தான் வருது!



பா.ஜ.,வை சேர்ந்த, மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சர்மன்சுக் மாண்டவியா: 'ஆயுஷ்மான்பாரத்' எனும் காப்பீடு திட்டத்தைஅமல்படுத்தும்படி, டில்லியில் ஆளும் ஆம் ஆத்மி அரசுக்கு மத்திய அரசு பல முறை கடிதம்எழுதியது. மது விற்பனையில்மட்டுமே ஆர்வமாக உள்ள ஆம்ஆத்மி அரசுக்கு, மக்கள் நலனில் துளிகூட அக்கறை இல்லை.

டவுட் தனபாலு: டில்லி மாநில அரசுக்கு சீக்கிரமே சட்டசபை தேர்தல் வருது... 'ஆயுஷ்மான் பாரத்' திட்டத்தை அமல்படுத்தி, அதன் வாயிலா உங்க கட்சிக்கு ஓட்டுகள் திசைமாறிட்டா, ஆம் ஆத்மி வெற்றி பாதிக்கப்படுமே... ஓட்டு வங்கி அரசியலுக்கு முன்னாடி, மக்கள்நலன் எல்லாம் மண்ணாங்கட்டிக்குசமம் என்பதில், 'டவுட்'டே இல்லை!



தமிழக சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன்: துாத்துக்குடி, சங்கர ராமேஸ்வரர்கோவில் நிலத்தை, பழனிசாமி என்பவர் குத்தகைக்கு எடுத்துள்ளார். அதில், எங்கள் கட்சி பிரமுகர் அம்பா சங்கர் ஆட்டுச் சந்தை அமைக்க உள் வாடகைக்குபெற்றுள்ளார். அதன் திறப்பு விழாவுக்கு அழைத்தார்; சென்றேன்;விற்பனையை துவக்கி வைத்தேன். மற்றபடி, கோவில் நிலம் எப்படி பெறப்பட்டது என்பது குறித்து எதுவும் தெரியாது. திறப்பு விழாவுக்குசென்றது தவறு என, இப்போதுநினைக்கிறேன்.

டவுட் தனபாலு: 'அமைச்சர் வந்து திறந்து வைக்கிறார்'னு சொல்லியே, அந்த சந்தைக்கு எல்லா வசதிகளையும் உங்க கட்சியினர் அதிகாரமா கேட்டு வாங்கியிருப்பாங்களே... உங்களைபோன்ற பொறுப்பான பதவியிலஇருக்கிறவங்க, ஒருமுறைக்கு நுாறு முறை யோசித்து, இந்தமாதிரி விழாக்களில் கலந்துக்கணும் என்பதில், 'டவுட்'டே இல்லை!








      Dinamalar
      Follow us