sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், மே 13, 2026 ,சித்திரை 30, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/தினம் தினம்/டவுட் தனபாலு/'டவுட்' தனபாலு

'டவுட்' தனபாலு

'டவுட்' தனபாலு


PUBLISHED ON : பிப் 17, 2024 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : பிப் 17, 2024 12:00 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன்: பள்ளி, கல்லுாரி வளாகங்களில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை தடுக்கப்பட்டுள்ளது. கடந்த மூன்று மாதங்களில், மாநிலம் முழுதும் புகையிலை பொருட்கள் விற்பனை செய்த, 6,500 கடைகள் மூடப்பட்டு, 'சீல்' வைக்கப்பட்டுள்ளன.

டவுட் தனபாலு: நல்ல விஷயம் தான்... ஆனாலும், 'சீல்' வைக்கப்பட்ட, 6,500 கடைகளில் எத்தனை கடைகள், அபராதம் கட்டியோ அல்லது கட்டாமலோ மீண்டும் திறக்கப்பட்டுள்ளன...? அவற்றில் மீண்டும் புகையிலை பொருட்கள் விற்பனை நடக்கலை என்பதை எல்லாம் அமைச்சர் உறுதிப்படுத்தினாரா என்ற, 'டவுட்' வருதே!



அ.தி.மு.க., பொதுச் செயலர் பழனிசாமி: எங்களுக்கு எஜமானர்கள் தமிழக மக்கள். அவர்கள் தான் எங்களுக்கு ஓட்டளிக்கின்றனர். அவர்கள் குரல் பார்லிமென்டில் ஒலிக்க, கட்சி நடத்துகிறோம். பதவிக்காக, நாங்கள் அடிமையாக இருந்ததில்லை. மக்களுக்கு சேவை செய்வது தான் எங்கள் நோக்கம்.

டவுட் தனபாலு: எல்லா கட்சிகளுமே, 'மக்களுக்கு சேவை செய்வதே எங்கள் கொள்கை' என்று தான் முழங்குகின்றன... ஆனா, நிஜத்தில் எந்த அரசியல் கட்சியாலும், மக்களுக்கு எந்த சேவையும் கிடைக்கலை என்பது தான், 'டவுட்'டே இல்லாத உண்மை!



பா.ஜ.,வைச் சேர்ந்த ஹரியானா முதல்வர் மனோகர் லால் கட்டார்: டில்லிக்கு சென்று விவசாயிகள் போராட்டம் நடத்துவதில், எங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. அவர்கள் போராடும் விதத்தில் தான் பிரச்னை உள்ளது. டிராக்டர், லாரிகளில் சென்று போராடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.

டவுட் தனபாலு: ராஜஸ்தான், பஞ்சாப் மாநிலங்கள்ல இருக்கிற விவசாயிகள் எல்லாம், நடந்தே டில்லிக்கு போய் போராட்டம் நடத்தணும்னு சொல்ல வர்றீங்களா...? அப்படி அவங்க பாதயாத்திரையா டில்லி போய் சேர்றதுக்குள்ள, லோக்சபா தேர்தலே முடிஞ்சிடும் என்பதில், 'டவுட்'டே இல்லை!



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us