தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/டவுட் தனபாலு/‘டவுட்’ தனபாலு: அக். 14

‘டவுட்’ தனபாலு: அக். 14

‘டவுட்’ தனபாலு: அக். 14


PUBLISHED ON : அக் 14, 2026 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 14, 2026 12:00 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மா.கம்யூ., தமிழக செயலர் சண்முகம்: இடைத்தேர்தலில், கம்யூனிஸ்ட் கட்சிகள் பெற்ற ஓட்டுகளை தொடர்ந்து, கம்யூ., கட்சிகள் மீதான வெறுப்பு, ஒவ்வாமை, நட்பு, நலன் என, பல விதங்களிலும் சமூக வலைதளங்களில் கருத்துகள் வெளிப்படுத்தப்படுகின்றன. ஆக்கப்பூர்வ விமர்சனங்களையும், ஆலோசனைகளையும் கம்யூ., இயக்கங்கள் கவனத்தில் எடுத்து பரிசீலிக்கும். கம்யூ.,க்கள் ஒழிய வேண்டுமென விரும்பும் எதிரிகளை, அதற்குரிய முறையில் எதிர்கொள்வோம். கம்யூனிசத்திற்கும், கம்யூ., கட்சிக்கும் என்றும் அழிவில்லை.

டவுட் தனபாலு: ‘இடைத்தேர்தலில் யாருக்கும் ஆதரவில்லை’ன்னு அறிவிச்சிட்டு, கவுரவமா ஒதுங்கி போயிருக்கலாம்... களத்தில் குதிச்சு, ஆயிரத்து சொச்சம் ஓட்டுகள் மட்டும் வாங்கி, உங்க பலத்தை அம்பலமாக்கிட்டீங்களே... எப்பவும் உங்க கட்சிகளை துாக்கி சுமக்கும் தி.மு.க.,வே, இனி உங்களை சீண்டுமா என்பது, ‘டவுட்’ தான்!

lll

புதிய தமிழகம் கட்சி நிறுவனர் கிருஷ்ணசாமி: தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ் குமாரை பதவி நீக்கம் செய்யக்கோரி, டில்லியில் நடக்கும் போராட்டங்களை, பா.ஜ.,வுக்கு எதிரான போராட்டங்களாகவே கருத வேண்டும். பிற நாடுகளில் நடந்தது போன்று, தற்போது இந்தியாவிலும் உருவாகி வருகிறது. இந்தியாவில் 13 ஆண்டுகளாக, நிலையான ஆட்சி நடந்து வருகிறது. அதுவே அண்டை நாடுகளுக்கும், மேலை நாடுகளுக்கும் கண்களை உறுத்துகிறது.

டவுட் தனபாலு: நீங்க சொல்றது, 100க்கு 100 உண்மை... ‘மோடி தலைமையில் இந்தியா வல்லரசாகிடுமோ’ன்னு, நம் அண்டை நாடுகள் மட்டுமில்லாம, அமெரிக்கா உள்ளிட்ட ஆதிக்க நாடுகளே பயப்படுகின்றன... அதனால தான், ‘ஜென் ஸி’ என்ற இளைய தலைமுறையினரை துாண்டிவிட்டு குழப்பம் விளைவிக்க பார்க்கிறாங்க... ஆனா, அவங்க எண்ணம் ஈடேறாது என்பதில், ‘டவுட்’டே இல்லை!

lll

பா.ஜ., தமிழக தலைவர் நயினார் நாகேந்திரன்: கடந்த 2010ல் தி.மு.க., அங்கம் வகித்த மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசில் தான், ‘நீட்’ தேர்வு கொண்டு வரப்பட்டது. நீட்டை அறிமுகப்படுத்திவிட்டு, இன்று அதற்கு எதிராக பேசி கையெழுத்திடுவது, காங்., – எம்.பி., ராகுலின் அப்பட்டமான இரட்டை வேடம்.

டவுட் தனபாலு: ‘நீட் தேர்வை ரத்து செய்ய முடியாது’ என சுப்ரீம் கோர்ட் திட்டவட்டமா சொல்லிடுச்சு... தப்பி தவறி எதிர்காலத்தில் காங்., ஆட்சியே அமைந்தாலும், நீட் தேர்வை ரத்து செய்ய முடியாது என்பது ராகுலுக்கும் நன்றாகவே தெரியும்... இருந்தாலும், அரசியலுக்காக இப்படி பேசுறார் என்பது, ‘டவுட்’ இல்லாம தெரியுது!

lll

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us