தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/டவுட் தனபாலு/‘டவுட்’ தனபாலு: அக். 16

‘டவுட்’ தனபாலு: அக். 16

‘டவுட்’ தனபாலு: அக். 16

1


PUBLISHED ON : அக் 16, 2026 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 16, 2026 12:00 AM

1


1
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தி.மு.க., ராஜ்யசபா எம்.பி., வில்சன்: வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த முறைகேடுகள் மற்றும் தலைமை தேர்தல் கமிஷனர் மீதான புகார்கள் தொடர்பான வழக்குகள், உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன. ‘அவை தொடர்பாக, காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சிக் குழுவினரை நீதிமன்றத்திற்கு வெளியே சந்திப்பது பொருத்தமாக இருக்காது’ என, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தெரிவித்த பின்னரும், காங்கிரஸ் கூட்டணியினர் அவரை சந்திக்க முயற்சித்தது தவறான அணுகுமுறை. அரசியல் களத்தில் நீதித்துறையை உள்ளிழுக்கக் கூடாது. உச்ச நீதிமன்றம் சுதந்திரமாக செயல்பட அனுமதிக்க வேண்டும்.

டவுட் தனபாலு: நீங்க சொல்றது, 100க்கு 100 சரி... இந்த குழுவுக்கு தலைமை வகித்து போன, லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுலுக்கு இதை யாராவது எடுத்து சொல்லியிருக்க வேண்டாமா...? மந்தை ஆடுகள் மாதிரி அவரது பின்னாடி போய் அவமானப்பட்டிருக்கணுமா என்ற, ‘டவுட்’ தான் வருது!

lll

தி.மு.க., தலைவர் ஸ்டாலின் : ‘அ.தி.மு.க.,வில் இருந்து மேலும் 15 பேரை வாங்கப் போகிறோம்’ என, வெட்கமே இல்லாமல் த.வெ. க.,வினர் ஒப்புதல் வாக்குமூலம் தருகின்றனர். ‘அதற்கு பணம் போதாமல் தான், மின்சாரம் வாங்குவதில் ஊழல் நடக்கிறதா’ என, மக்கள் மனதில் கேள்விகள் எழுகின்றன.

டவுட் தனபாலு: அது சரி... அ.தி.மு.க.,வில் இருந்து தானே ஆட்களை இழுக்கப் போறாங்க... உங்க கட்சியினருக்கு அவங்க வலை விரிக்கலையே... அதேநேரம், ‘அ.தி.மு.க.,வினருக்கு இருக்கும் மவுசு, நமக்கு இல்லையே’ன்னு, உங்க கட்சியின் பல எம்.எல்.ஏ.,க்கள் உள்ளுக்குள்ள வருத்தப்படுவாங்க என்பதில், ‘டவுட்’டே இல்லை!

lll

தி.மு.க., முன்னாள் அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா: தமிழகத்தில் அக்., 12 வரை, 1 யூனிட் 37 ரூபாய் வீதம் அவசர கதியில் மின்சாரம் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. கடந்த செப்., 9லேயே ஆந்திர மாநிலம், 1 யூனிட் 16 – 20 ரூபாய்க்குள் தனக்கான அக்., மாத தேவைக்கான மின்சார கொள்முதலுக்கு ஒப்பந்தம் செய்து விட்டது. தமிழக அரசு ஜோசியம் பார்த்து கடைசி நேரம் வரை காத்திருந்ததா? துாத்துக்குடி, வடசென்னை ஆகிய இரு அனல் மின் நிலையங்களில் வெறும் 5 ரூபாய்க்கு உற்பத்தி செய்யக்கூடிய மின்சாரத்தை, ஏழு மடங்கு அதிக விலை கொடுத்து வாங்குவது ஏன்?

டவுட் தனபாலு: தி.மு.க., ஆட்சியின் ஐந்து வருஷங்கள்ல, புதிய மின் உற்பத்தி திட்டங்கள் எதையாவது துவங்குனீங்களா...? வெளி சந்தையில் மின்சாரம் கொள்முதல் செய்தே, மின் வாரியத்தின் கடன் சுமையை ஏத்திட்டு போயிட்டீங்க... இப்ப நிலவும் மின் தட்டுப்பாட்டுக்கு முழுமுதற்காரணம் தி.மு.க., தான் என்பதில், ‘டவுட்’டே இல்லை!

lll

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us