தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/டவுட் தனபாலு/ 'டவுட்' தனபாலு

'டவுட்' தனபாலு

'டவுட்' தனபாலு


PUBLISHED ON : மே 06, 2025 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மே 06, 2025 12:00 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பா.ஜ., தேசிய மகளிரணி தலைவர் வானதி: தமிழக முதல்வர், தன் அமைச்சரவை சகாக்களை மாற்றிக் கொண்டே இருக்கக்கூடிய சூழல் தொடர்ந்து கொண்டே இருக்கும். அடுத்து வரும் சட்டசபை தேர்தலுக்கு முன், தமிழக அமைச்சரவையில் இருக்கக்கூடிய எத்தனை அமைச்சர்கள், அமைச்சர் என்ற அடைமொழி இல்லாமல் மக்களை சந்திப்பர் என்பதை, நாம் அனைவரும் பார்க்கத்தான் போகிறோம். சில சமயம், மக்களையே சந்திக்க முடியாத சூழ்நிலை கூட, அந்த எம்.எல்.ஏ.,க்களுக்கு ஏற்படலாம்.

டவுட் தனபாலு: டில்லியில் ஆம் ஆத்மி கட்சி தலைவர்கள், பல்வேறு ஊழல் வழக்குகளில் சிக்கி, வரிசையா ஜெயிலுக்கு போனாங்களே... அதே கதை, தமிழகத்திலும் நடக்கும்னு சொல்றாங்களோ... எம்.எல்.ஏ.,க்கள் பலரும், 'உள்ளே' போயிட்டா, தி.மு.க.,வுக்கு தேர்தல் பணி செய்வது யார் என்ற, 'டவுட்' வருதே!



அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி: தி.மு.க., ஆட்சிக்கு வந்து, நான்கு ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது இதுவரை, எந்த பெரிய திட்டத்தையும் முதல்வர் ஸ்டாலின் கொண்டு வரவில்லை. ஆனால், அவர் பெரும் சாதனை செய்துவிட்டது போல பேசிக் கொண்டிருக்கிறார். தன் மகன் உதயநிதியை துணை முதல்வராக்கியது தான், அவருடைய ஒரே சாதனை. 2026ல் நடக்கவிருக்கும் சட்டசபை தேர்தலில் குடும்ப ஆட்சிக்கு முடிவு கட்டப்படும்.

டவுட் தனபாலு: கடந்த 1968ல் அரசியலுக்கு வந்த இன்றைய முதல்வர் ஸ்டாலினை, அவரது தந்தை கருணாநிதி, 40 வருஷம் கழிச்சு, 2008ல் தான் துணை முதல்வராக்கினாரு... ஆனா, அரசியலுக்கு வந்த மூணே வருஷத்துல, தன் மகன் உதயநிதியை துணை முதல்வர் ஆக்கியது, முதல்வர் ஸ்டாலினின் அபார சாதனை என்பதில், 'டவுட்'டே இல்லை!





தமிழக பா.ஜ., பொதுச்செயலர் ராம ஸ்ரீனிவாசன்: தி.மு.க.,வுக்கு எதிரான ஓட்டுகள் சிதறக்கூடாது என யார் கருதினாலும், அவர்கள் எங்கள் கூட்டணிக்கு வர வேண்டும். தி.மு.க.,வை வீழ்த்த, நடிகர் விஜய் வந்தாலும் வரவேற்போம். அவருக்கு அரசியல் அனுபவம் கிடையாது; ஆனாலும், கூட்டம் சேர்கிறது. சேரும் கூட்டம் என்பது வேறு; ஓட்டு என்பது வேறு. இதை அவர் புரிந்து அரசியல் செய்ய வேண்டும்.

டவுட் தனபாலு: உங்க கட்சியில், கூட்டத்தை ஈர்க்கக்கூடிய தலைவர்கள் யாரும் இல்லை... அதனால, நடிகர் விஜயை காண வரும் கூட்டத்தை நீங்க பயன்படுத்திக்க பார்க்குறீங்க என்பது தெரியுது... ஆனாலும், நீங்க விரிக்கும் வலையில் விஜய் என்ற சுறா சிக்குமா என்பது, 'டவுட்'தான்!



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us