தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/டவுட் தனபாலு/ 'டவுட்' தனபாலு

'டவுட்' தனபாலு

'டவுட்' தனபாலு


PUBLISHED ON : ஜூலை 13, 2025 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூலை 13, 2025 12:00 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

என்.ஆர்.காங்., கட்சி தலைவரான, புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி: பா.ஜ.,வுக்கும், எங்களுக்கும் எந்த சிக்கலும் இல்லை. அரசு நிர்வாகத்தில் அடிக்கடி சிறு பிரச்னைகள் ஏற்படுவது இயற்கை தான். அந்த வகையில், இப்போதும் ஒருசில பிரச்னைகள் ஏற்பட்டுள்ளன; அவற்றை பேசி சரி செய்துள்ளோம். 'பா.ஜ., கூட்டணியை விட்டு வெளியேறினால், என்.ஆர்.காங்., சிக்கல்களை சந்திக்க நேரிடும்' என, முன்னாள் முதல்வர் நாராயணசாமி கூறுகிறார். அப்படி எந்த சிக்கலும் எங்களுக்கு ஏற்படாது.

டவுட் தனபாலு: யூனியன் பிரதேசமான புதுச்சேரியின் முக்கால்வாசி அதிகாரம், மத்திய அரசிடம் தான் இருக்கு... பா.ஜ.,வுடன் நீங்க கூட்டணி வச்சதுல இருந்தே, முழு அதிகாரமும் அந்த கட்சி வசமே போயிடுச்சுன்னு எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுறாங்க... ஒரு மேயருக்கு இருக்கிற அதிகாரத்தையாவது, பா.ஜ.,வினர் உங்களுக்கு தர்றாங்களா என்ற, 'டவுட்' தான் வருது!



பத்திரிகை செய்தி: சில நாட்களுக்கு முன், திண்டிவனம் அருகே ஓமந்துாரில் பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் நடத்திய செயற்குழு கூட்டத்தில் பங்கேற்ற முன்னாள் மத்திய அமைச்சர் ஏ.கே.மூர்த்தி, அடுத்த இரண்டு நாட்களில் சென்னையில், அன்புமணி நடத்திய ஆலோசனைக் கூட்டத்திலும் பங்கேற்றார். இரண்டே நாளில், அவர் அணி மாறியது பரபரப்பாக பேசப்படுகிறது.

டவுட் தனபாலு: ஏ.கே.மூர்த்தி, பல வருஷங்களா பா.ம.க.,வில் இருக்காரு... மத்திய இணை அமைச்சராகவும் இருந்திருக்காரு... அப்படிப்பட்டவர் அணி மாறிட்டாரா அல்லது அங்க நடக்கிறதை இங்கயும், இங்க நடக்கிறதை அங்கயும் கண்டறியும் உளவாளியா மாறிட்டாரா என்ற, 'டவுட்'தான் வருது!





அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி: தமிழகத்தில், குடும்ப ஆட்சி தான் நடக்கிறது. கருணாநிதி, ஸ்டாலின், உதயநிதி என ஆள வந்துவிட்டனர். அந்த ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். 'டாஸ்மாக்'கில் பாட்டிலுக்கு, 10 ரூபாய் கூடுதலாக வசூலித்து ஏழைகளின் வயிற்றில் அடிக்கிறது தி.மு.க., ஆட்சி. தினமும், 1.50 கோடி பாட்டில்கள் விற்பதன் மூலம், ஆண்டுக்கு, 5,400 கோடி ரூபாய் கொள்ளையடிக்கின்றனர். அது ஒரு குடும்பத்துக்கே செல்கிறது.

டவுட் தனபாலு: 'டாஸ்மாக்'கில் அடிமட்ட ஊழியர் துவங்கி, உச்சபட்ச அதிகாரிகள், ஆட்சியாளர்கள் வரைக்கும் ஊழல் செய்வது, நாலு வருஷம் முதல்வரா இருந்த உங்களுக்கு நல்லாவே தெரியும்... 'இப்படி ஊழலில் ஊறி திளைக்கும் டாஸ்மாக்கை, அ.தி.மு.க., ஆட்சிக்கு வந்தால் இழுத்து மூடுவேன்'னு சொல்ற துணிவு உங்களுக்கு இருக்கா என்ற, 'டவுட்' வருதே!



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us