தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/டவுட் தனபாலு/ 'டவுட்' தனபாலு

'டவுட்' தனபாலு

'டவுட்' தனபாலு


PUBLISHED ON : ஜூலை 16, 2025 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூலை 16, 2025 12:00 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தமிழக துணை முதல்வர் உதயநிதி: வீட்டை விட்டு வெளியே வராமல் இருந்த பெண்கள், இன்று விண்வெளிக்கு பயணம் செய்கின்றனர். தமிழக முதல்-வராக பொறுப்பேற்றவுடன் முதல் கையெழுத்தை, மகளிர் இலவச பஸ் பயணத்திற்காக ஸ்டாலின் போட்டார். இதன் மூலம் மாதம், 900 ரூபாயை மகளிர் சேமிக்கின்றனர். முதல்வர் ஸ்டாலின், மகளிருக்கு எப்படி பக்க பலமாக இருக்கிறாரோ, அதேபோல் மகளிர், அவருக்கு பக்க பலமாக இருக்க வேண்டும்.

டவுட் தனபாலு: 'மகளிருக்கு இலவச பஸ் பயணம் எல்லாம் குடுத்திருக்கோம்... தேர்தல்ல, தி.மு.க.,வுக்கு சாதகமா ஓட்டு போடுங்க'ன்னு சொல்லாம சொல்றீங்க என்பது, 'டவுட்'டே இல்லாம தெரியுது!





வி.சி., கட்சி தலைவர் திருமாவளவன்: பாதிக்கப்பட்ட மக்களுக்காக, த.வெ.க., தலைவர் விஜய் நடத்தும் போராட்டம் அவசியமானது தான். ஆனால், அரசியல் உள்நோக்கம் கொண்டதாக இருந்தால், அது பாதிக்கப்பட்டவர்களுக்கு பயன் தராது. தி.மு.க., அரசுக்கு எதிரான விமர்சனம் என்ற அடிப்படையில் மட்டுமே இது போன்ற பிரச்னைகளை சிலர் கையில் எடுக்கின்றனர்.

டவுட் தனபாலு: தி.மு.க., கூட்டணியில் இருப்பதால், உங்களால போராட்டம் நடத்த முடியலை... தப்பி தவறி ஒன்றிரண்டு போராட்டங்களை நடத்தினாலும், கைகளை கட்டிட்டு கபடி ஆடச் சொல்ற மாதிரி, அரசை விமர்சிக்க முடியாம தவிக்கிறீங்க... இப்ப, விஜய் நடத்திய போராட்டத்துக்கு கிடைத்த வரவேற்பு, உங்களது துாக்கத்தை கெடுத்திருப்பது, 'டவுட்'டே இல்லாம தெரியுது!





தமிழக நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் நேரு: தமிழகத்தில், 100 நாள் வேலைக்கும், புதிய பள்ளிகள் கட்டுவதற்கும், 'ஜல் ஜீவன்' திட்டத்திற்கும் தர வேண்டிய, 3,500 கோடி ரூபாயை மத்திய அரசு தராமல் நிறுத்தி விட்டது; இந்த ஆண்டுக்கான, 4,000 கோடி ரூபாயையும் தரவில்லை. மத்திய அரசிடம் இருந்து, ஒவ்வொரு முறையும் போராடித்தான் நிதியை பெற வேண்டிய நிலை இருக்கிறது. கடுமையான நிதி நெருக்கடியிலும், மற்ற மாநிலங்களை விட மிகச் சிறப்பாக, தமிழக முதல்வர் அனைத்து திட்டங்களையும் நிறைவேற்றி காட்டி உள்ளார்.

டவுட் தனபாலு: நிஜத்தை சொல்லுங்க... தேர்தல் வாக்குறுதிகளா கொடுத்த எல்லா திட்டங்களையும் முதல்வர் ஸ்டாலின் முடித்து விட்டாரா... '100 சதவீதம்வாக்குறுதிகளையும் நிறைவேற்றி விட்டோம்'னு சொல்லி, தமிழக மக்களிடம் உங்களால நெஞ்சை நிமிர்த்தி ஓட்டு கேட்க முடியுமா என்ற, 'டவுட்' வருதே!



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us