sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/தினம் தினம்/டவுட் தனபாலு/ 'டவுட்' தனபாலு

'டவுட்' தனபாலு

'டவுட்' தனபாலு


PUBLISHED ON : நவ 07, 2025 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : நவ 07, 2025 12:00 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் அணியில் இருந்து விலகி, தி.மு.க.,வில் இணைந்த மனோஜ் பாண்டியன்: திராவிட கொள்கைகளை பாதுகாக்கும் தி.மு.க., தலைமையை ஏற்று, அக்கட்சியின் தொண்டராக பணியாற்ற தி.மு.க.,வில் இணைந்துள்ளேன். மாற்றுக் கட்சிக்காரர் என்றுகூட பார்க்காமல், முதல்வர் ஸ்டாலின் என்னை அன்புடன் வரவேற்றார். அது தான் தலைமைக்கான பண்பு. திராவிட இயக்க கொள்கைகளை பாதுகாக்கும் ஒரு உன்னத தலைவன் கீழ் செயல்பட விரும்பி, தி.மு.க.,வில் இணைந்து விட்டேன்.

டவுட் தனபாலு: உங்க அப்பா பி.எச்.பாண்டியன், வாழ்நாள் முழுக்க தி.மு.க., எதிர்ப்பு ஒன்றையே லட்சியமாக கொண்டிருந்தார்... அவரை பின்பற்றி அரசியலுக்கு வந்த நீங்க, அரசியல் ஆதாயத்துக்காக தி.மு.க., முகாமில் ஐக்கியமானதை, உங்க அப்பாவின் ஆன்மாவும், விசுவாசிகளும் ஏத்துக்குவாங்களா என்பது, 'டவுட்' தான்!

பா.ம.க., தலைவர் அன்புமணி: ராமதாசை சுற்றியுள்ள துரோகிகள், தீய சக்திகள், தி.மு.க., கைக்கூலிகள் இருக்கும் வரை, அவருடன் இணைய மாட்டேன். ராமதாஸ் சமூக சீர்திருத்தவாதி. அவரது மனதை மாற்றிய துரோகிகள் இருக்கும் வரை, அந்த இடத்திற்கு நான் செல்ல மாட்டேன்.

டவுட் தனபாலு: ராமதாசை சுற்றி துரோகிகள், தீய சக்திகள் இருக்கிறதா சொல்றீங்களே... உங்களது சம்பந்தியும், சகோதரியுமான ஸ்ரீகாந்தியும், தன் தந்தை ராமதாஸ் பக்கத்துல தானே இருக்காங்க... நீங்க சொல்ற துரோகிகள், தீய சக்திகள் பட்டியல்ல அவங்களும் உண்டா என்ற, 'டவுட்' வருதே!

சிவகங்கை காங்., - எம்.பி., கார்த்தி: தமிழகம் முழுதும் கூலிப்படையாக செயல்படுவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. தமிழகம் முழுதும் யாரெல்லாம் ரவுடிகள் என கணக்கெடுக்க வேண்டும். அவர்களை தொடர்ச்சியாக போலீசார் கண்காணிக்க வேண்டும். தமிழகம் முழுதும் ஒரே நேரத்தில், குற்றவாளிகள் மீது போலீசார் பெரிய அளவில் அதிரடி ஆப்பரேஷன் நடத்த வேண்டும்.

டவுட் தனபாலு: 'தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு சந்தி சிரிக்குது... ரவுடிகள் ராஜ்ஜியம் தான் நடக்குது... இதை, தி.மு.க., அரசு இனியும் வேடிக்கை பார்த்துட்டு இருக்கக்கூடாது'ன்னு எச்சரிக்கையா சொல்ல வேண்டியதை, கூட்டணி தர்மத்துக்காக நோகாம சொல்றீங்க என்பது, 'டவுட்' இல்லாம தெரியுது!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us