தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/பேச்சு, பேட்டி, அறிக்கை/பேச்சு, பேட்டி, அறிக்கை: அக். 15

பேச்சு, பேட்டி, அறிக்கை: அக். 15

பேச்சு, பேட்டி, அறிக்கை: அக். 15


PUBLISHED ON : அக் 15, 2026 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 15, 2026 12:00 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியைச் சேர்ந்த, தமிழக சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் ஷாஜகான் பேச்சு: ஒவ்வொரு கட்சிக்கும், ஒவ்வொரு அரசியல் நிலைப்பாடு இருக்கிறது. தமிழகத்தில் மூன்று, நான்கு அணிகளாக அரசியல் சென்று கொண்டு இருக்கிறது. ஒரு கட்சி ஒரு அணியில் சேர்வது குறித்து, அக்கட்சியின் தலைமை தான் முடிவு எடுக்கும். தற்போது, வி.சி.க., – பா.ம.க., குறித்து வரும் செய்திகள் வதந்தியாக இருக்கிறது.

பா.ம.க., உங்க கூட்டணிக்கு வந்தாலும், வராவிட்டாலும் உங்களுக்கு எந்த லாபமோ, நஷ்டமோ இல்லையே... அதனால, அதெல்லாம் உங்களுக்கு வதந்திகளா தான் தெரியும்!

தி.மு.க., சட்டத்துறை இணை செயலர் பரந்தாமன் அறிக்கை: தேர்தல் களத்தில் வெற்றியும், தோல்வியும் இயல்பானவை. அதுவும் திணிக்கப்பட்ட இடைத்தேர்தல் களத்தில் ஆளுங்கட்சியினரின் அனைத்து வகை அத்துமீறல்களையும், அதிகார பலத்தையும் முதல்வர் விஜய் தெரு தெருவாக வலம் வந்ததையும் மீறி, தி.மு.க., என்றும் வலிமையானது என்பதை தேர்தல் முடிவுகள் உணர்த்துகின்றன.

நீங்க ஆளுங்கட்சியாக இருந்து, இடைத்தேர்தல்களில் செய்த முறைகேடுகளில் ஒன்றைக்கூட த.வெ.க., செஞ்சது மாதிரி தெரியலையே!

த.வெ.க.,வைச் சேர்ந்த, தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் பேட்டி: மதச்சார்பற்ற சமூக நீதி கூட்டணியில் வி.சி.க., ஒரு துாணாக இருக்கிறது. எங்கள் கூட்டணி பலமாக இருக்கிறது. அமைச்சர் வன்னி அரசு போல நிறைய பேர், நிறைய கருத்துகளை சொல்லலாம். ஆனால், உண்மைத்தன்மை எங்களுக்கு தெரியும். திருமாவளவன், எங்கள் தாய் சிறுத்தை. திருமாவளவனும், முதல்வரும் இணைந்திருப்பது ஒரு கொள்கை கூட்டணி.

தி.மு.க., கூட்டணியில் திருமாவளவன் இருந்தப்பவும், ‘இது கொள்கை கூட்டணி’ன்னு தான் பல மேடைகளில் முழங்கினாங்க!

பா.ஜ., தமிழக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் அறிக்கை:


பிரதமர் மோடியின் தமிழக வருகை, எங்களுக்கு ஒரு சாதாரண வருகையல்ல. அது, சோர்ந்து கிடந்த ஒவ்வொரு தொண்டரின் உள்ளத்திலும், புதிய நம்பிக்கையையும், உற்சாகத்தையும், உத்வேகத்தையும் விதைத்த மகத்தான தருணம். தேர்தல் தோல்வியால் ஏற்பட்ட சோர்வு, இடையில் கட்சி எதிர்கொண்ட சவால்கள் என அனைத்தையும் கடந்து, மோடியை வரவேற்பதற்காக தொண்டர்கள் ஒவ்வொருவரும் புத்துணர்ச்சி யுடன் திரண்ட காட்சி மறக்க முடியாதது.
- அது சரி... ‘மோடி என்ற ஒற்றை மனிதரை நம்பி தான் தமிழகத்தில் பா.ஜ., இயங்கிட்டு இருக்கு’ என்பதை சொல்லாம சொல்லிட்டீங்க!



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us