தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/பேச்சு, பேட்டி, அறிக்கை/பேச்சு, பேட்டி, அறிக்கை: அக். 14

பேச்சு, பேட்டி, அறிக்கை: அக். 14

பேச்சு, பேட்டி, அறிக்கை: அக். 14


PUBLISHED ON : அக் 14, 2026 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 14, 2026 12:00 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பா.ஜ., தமிழக பொதுச்செயலர் ஏ.பி.முருகானந்தம் அறிக்கை: தமிழகத்திற்கு, 13 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான வளர்ச்சி திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்துள்ளார். குஜராத் முதல்வர், பிரதமர் பதவிகளில் 25 ஆண்டு காலத்தை அவர் நிறைவு செய்திருந்தாலும், இன்னும் 25 ஆண்டு காலம் அவர் தான் இந்தியாவின் பிரதமர். பிரதமர் வேட்பாளர் கனவு காணும் தலைவர்கள் இதை புரிந்து கொள்வரா?

இந்த 12 வருஷங்கள் மோடி பிரதமரா இருந்ததையே அவங்களால ஜீரணிக்க முடியலை... இன்னும் 25 வருஷங்கள் அவர் தான் என்றால், பலரும் அரசியல் துறவறம் போயிடுவாங்க!

த.வெ.க.,வைச் சேர்ந்த, தமிழக பத்திரப்பதிவு துறை அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன் பேட்டி: தற்போது நடந்து முடிந்துள்ள இடைத்தேர்தலில், த.வெ.க., அரசின் நான்கு மாத கால சிறப்பான ஆட்சிக்கு பரிசளிக்கும் வகையில் மக்கள் ஓட்டு போட்டுள்ளனர். எதிர்க்கட்சிகளுக்கு தகுந்த பாடம் புகட்டும் விதமாக இந்த இடைத்தேர்தல் முடிவு அமைந்துள்ளது.

அது மட்டும் இல்லை... அடுத்த அஞ்சு வருஷத்துக்கும் நீங்க நல்லாட்சி தருவீங்கன்னு நம்பியும் தான் ஓட்டு போட்டிருக்காங்க!

சிவகங்கை காங்., – எம்.பி., கார்த்தி அறிக்கை: சென்னை ஐ.ஐ.டி.,யில் பிரதமர் மோடி பங்கேற்ற நிகழ்ச்சியில், சென்னை திரு.வி.க.நகர் த.வெ.க., – எம்.எல்.ஏ., பல்லவி தன் குழந்தையுடன் பங்கேற்றுள்ளார். கைக்குழந்தையை பொது நிகழ்ச்சிகளுக்கு அழைத்து செல்வது, அரசியல் விளம்பரத்திற்காகவும், கவனத்தை ஈர்ப்பதற்காகவும் செய்யப்படுவது போன்ற தோற்றத்தை ஏற்படுத்துகிறது. இது தொடர்பாக, முதல்வர் விஜய் உரிய ஆலோசனை வழங்குவார் என நம்புகிறேன்.

விழாவில் கேட்கும், ‘மைக், ஸ்பீக்கர்’ சத்தங்களால மிரண்டு கைக்குழந்தை அழுதால், பலருக்கும் தர்மசங்கடம் ஏற்படும் என்பதை சம்பந்தப்பட்டவங்க அல்லவா உணரணும்!

த.வெ.க.,வைச் சேர்ந்த, தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் அருண்ராஜ் பேட்டி:


அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி, தன் கட்சியில் உள்ள பிரச்னையை முதலில் சரி செய்யட்டும்; ஆட்சியை பிடிப்பது பற்றியெல்லாம் பிறகு பேசலாம். ‘தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும்’ என பேச அவருக்கு தகுதியில்லை. எந்த சூழலில் அவர் முதல்வரானார்; யாரால் முதல்வரானார்; அவர்களையே எப்படி நடத்தினார் என்பதெல்லாம் மக்களுக்கு தெரியும். த.வெ.க.,வையும் ஆட்சியமைக்க விடாமல் தடுக்க, சூழ்ச்சி, குறுக்கு வழி என்று செயல்பட்டவர் அவர். அ.தி.மு.க.,வை அவரே குழி தோண்டி புதைத்து விட்டார்.
- பழனிசாமியே மறந்து போயிட்ட மலரும் நினைவுகளை எல்லாம் துாசு தட்டி எடுத்து விடுறீங்களே!



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us