தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/பேச்சு, பேட்டி, அறிக்கை/பேச்சு, பேட்டி, அறிக்கை

பேச்சு, பேட்டி, அறிக்கை

பேச்சு, பேட்டி, அறிக்கை

1


PUBLISHED ON : அக் 13, 2026 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 13, 2026 12:00 AM

1


1
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பா.ஜ., தமிழக தலைவர் நயினார் நாகேந்திரன் பேட்டி: இடைத்தேர்தலில் மக்கள் தீர்ப்பை வரவேற்கிறோம். 1989க்கு பின், மருங்காபுரி இடைத்தேர்தலை தவிர, அனைத்து இடைத்தேர்தல்களிலும் ஆளுங்கட்சியே வென்றுள்ளது. கம்யூனிஸ்ட்கள் குறைந்த ஓட்டுகளை பெற்றிருப்பது, அவர்களது செல்வாக்கை நிரூபித்துள்ளது.

இதை பார்க்கிறப்ப, 'எங்களுக்கு ஒரு கண்ணு தான் போயிருக்கு... ஆனா, எங்க எதிரிக்கு ரெண்டு கண்ணும் போயிடுச்சே'ன்னு குதுாகலிக்கிற மாதிரி தெரியுதே!

வி.சி.க.,வைச் சேர்ந்த, தமிழக சமூக நீதித்துறை அமைச்சர் வன்னி அரசு பேட்டி: தேர்தல் ஆணையர் போன்றவர்கள் எஸ்.ஐ. ஆரை., தவறாக பயன் படுத்தியுள்ளதாக, அவருடன் உள்ள அதிகாரிகளே கூறியுள்ளனர். தேர்தல் ஆணையரின் முறைகேடுகள், தேர்தல் ஜனநாயகத்திற்கு எதிரானவை என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. இதை கண்டித்து தான், 'இண்டி' கூட்டணியில் இருக்கும் நாங்கள், டில்லியில் நடந்த போராட்டத்தில் பங்கேற்றுள்ளோம்.

தேர்தல் ஆணையரை கண்டித்து டில்லியில் ஆவேசம் காட்டும் நீங்க, தமிழகத்தில் மவுனமா இருக்கீங்களே... இந்த விவகாரத்தில், த.வெ.க.,வின், 'அடக்கி வாசிக்கும்' கொள்கையை நீங்களும் கடைப்பிடிக்கிறீங்களோ?

த.வெ.க., துணை பொதுச்செயலர் கடம்பூர் ராஜு பேட்டி: இரண்டு தொகுதி இடைத்தேர்தலில், வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை முதல்வர் விஜய் பெற்றுள்ளார். தமிழகத்தில் இனி த.வெ.க., என்ற ஒரே கழகம் தான், மக்களின் ஆதரவு பெற்ற ஏகோபித்த சக்தி என்பது நிரூபிக்கப்பட்டு உள்ளது.

இந்த வெற்றியை, ஆட்சிக்கு கிடைத்த நற்சான்றிதழாக பார்க்க வேண்டும். 2026 தேர்தலில் மூன்றாவது இடத்திற்கு சென்றது போல, இந்த இடைத்தேர்தலில் ஏற்கனவே வெற்றி பெற்ற தொகுதிகளிலும் அ.தி.மு.க., மூன்றாவது இடம் தான் பிடித்துள்ளது.

அ.தி.மு.க., மூன்றாம் இடத்துக்கு போனதற்கு, உங்களை போன்ற முன்னணி தலைவர்கள் அங்கிருந்து விலகியதும் ஒரு காரணம் தானே!

அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் உதயகுமார் பேட்டி:


தற்போது நடந்து முடிந்த இரண்டு இடைத்தேர்தல்களில், அ.தி.மு.க., 25 - 26 சதவீத ஓட்டு வங்கியை உறுதி செய்துள்ளது. அதிகாரத்தில் இருப்பவர்கள், 'அ.தி.மு.க., அழிந்து விட்டது, தீர்ந்துபோன கட்சி, எங்கே இருக்கிறது?' என்றெல்லாம் ஆணவத்தின் உச்சமாக பேசி வருகின்றனர். அதிகார துஷ்பிரயோகங்கள் மற்றும் அடக்குமுறைகளை தாண்டி, அ.தி.மு.க., இந்த ஓட்டு வங்கியை உறுதி செய்துள்ளது.
- முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இருந்தப்ப, 35 சதவீதத்துக்கும் மேலான ஓட்டு வங்கியுடன் தமிழகத்தின் முதன்மை கட்சியா இருந்த நீங்க, இன்று மூன்றாவது இடத்துக்கு போயிட்டு, பெருமையா வேற பேசுறீங்களே!



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us