sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 08, 2025 ,ஐப்பசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

தினம் தினம்

/

டவுட் தனபாலு

/

'டவுட்' தனபாலு

/

'டவுட்' தனபாலு

'டவுட்' தனபாலு

'டவுட்' தனபாலு


PUBLISHED ON : நவ 08, 2025 12:00 AM

Google News

PUBLISHED ON : நவ 08, 2025 12:00 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தமிழக ஹிந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு: முதல்வரின் உறுதியான நடவடிக்கைகள், மக்கள் மேம்பாட்டிற்கு அவர் எதிர்கொள்ளும் சிரமங்கள், எதிர்த்து நிற்க வேண்டிய பொருளாதார சூழல்கள், மத்திய அரசின் வஞ்சனை, இவற்றையெல்லாம் புரிந்து கொண்ட நல்ல உள்ளங்கள், தி.மு.க.,வை நோக்கிதான் வருவர்.

டவுட் தனபாலு: மனோஜ் பாண்டியன் உங்க முகாமில் சங்கமம் ஆகிட்டார்... நீங்களும் முன்னாள் அ.தி.மு.க.,காரர் என்பதால், அங்கு அதிருப்தியில் இருப்பவர்களை இழுத்துட்டு வரும் பணியை, தி.மு.க., தலைமை தங்களிடம் தான் ஒப்படைச்சிருக்கோ என்ற, 'டவுட்'தான் வருது!

தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன்: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், 'உங்களுடன் ஸ்டாலின்' முகாமில், மகளிர் உரிமைத்தொகை தொடர்பாக பெறப்பட்ட, 49,429 மனுக்களில், 19,290 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன. 'விடுபட்ட எல்லாருக்கும் கண்டிப்பாக மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும்' என, துணை முதல்வர் உதயநிதி அறிவித்த இரு தினங்களிலேயே, தி.மு.க., அரசின் சாயம் வெளுத்து விட்டது.

டவுட் தனபாலு: 'இந்த மாதிரி, மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்ட பெண்கள் யாரும் கவலைப்பட வேண்டாம்... தமிழகத்தில், தே.ஜ., கூட்டணி ஆட்சியை பிடிச்சதும், அவங்களுக்கும் மகளிர் உரிமை தொகை வழங்கப்படும்'னு வாக்குறுதி குடுத்து பாருங்க... அந்த பெண்களின் ஓட்டுகள், 'டவுட்' இல்லாம உங்க கூட்டணிக்கு விழுந்துடும்!

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன்: தமிழகத்தில், பாலியல் வன்முறைகள் அதிகரிப்பது கவலை அளிக்கிறது. பெரும்பாலான குற்ற சம்பவங்கள், போதையில் இருப்பவர்களாலேயே நடக்கின்றன. இந்தியாவில் அதிகளவில் மது அருந்துவதில், இரண்டாவது மாநிலமாக தமிழகம் உள்ளது. மக்கள் தொகையில், 12 சதவீதம் பேர் குடிநோயாளிகள் என, ஆய்வுகள் தெரிவிக்கின்றன. பீஹாரில், மதுவிலக்கு அமலுக்கு வந்த பின், அங்கு பெண்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் குறைந்துள்ளன. அதை பின்பற்றி, 2016 தேர்தலில், 'பூரண மதுவிலக்கை அமல்படுத்துவோம்' என, தி.மு.க., அளித்த வாக்குறுதியை அமல்படுத்த வேண்டும்.

டவுட் தனபாலு: அப்படி வாக்குறுதி தந்ததால் தான், தி.மு.க.,வில் இருக்கும் சாராய ஆலை அதிபர்களே, 'உள்குத்து' வேலை பார்த்து, 2016ல் தி.மு.க.,வை தோற்கடிச்சிட்டதா சொல்றாங்க... இதனால, பூரண மதுவிலக்கு என்ற, 'ரிஸ்க்'கை மறுபடியும் தி.மு.க., எடுக்குமா என்பது, 'டவுட்'தான்!






      Dinamalar
      Follow us