தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/நிஜக்கதை/என் உழைப்பின் நோக்கம் இதுவே

என் உழைப்பின் நோக்கம் இதுவே

என் உழைப்பின் நோக்கம் இதுவே


PUBLISHED ON : அக் 26, 2026 04:39 PM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 26, 2026 04:39 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தமிழகத்தில் பன்னிரண்டாம் வகுப்பிற்குப் பிறகு பொருளாதாரச் சூழல் காரணமாகப் படிப்பைத் தொடர முடியாத ஏழை எளிய மாணவ- மாணவியைத் தேர்ந்தெடுத்து, அவர்களின் முழு கல்விச் செலவையும் ஏற்று ஆனந்தம் அமைப்பு உயர்கல்வி வழங்கி வருகிறது.

இந்த அமைப்பின் மூலம் இதுவரை எம்பிபிஎஸ், பொறியியல், கலை மற்றும் அறிவியல், டிப்ளமோ, பாரா மெடிக்கல், சட்டம் மற்றும் நர்சிங் உள்ளிட்ட பல்வேறு படிப்புகளைக் கற்று மொத்தம் 1,378 மாணவர்கள் பயன் பெற்றுள்ளனர்.

இங்கு கல்வி பயின்ற மாணவர்கள் இன்று மைக்ரோசாஃப்ட், இன்ஃபோசிஸ், ஐபிஎம், ஹெச்சிஎல் போன்ற முன்னணி பன்னாட்டு நிறுவனங்களிலும், மத்திய மற்றும் மாநில அரசுப் பணிகளிலும், வெளிநாடுகளிலும் பணிபுரிந்து தங்கள் குடும்பங்களின் வறுமையை முற்றிலுமாக அகற்றியுள்ளனர்.

இந்த வருடம் தேர்வான மாணவர்களுக்கு வாழ்வியல் பயிலரங்கள் வழங்கப்பட்டது அதன் நிறைவு விழா மாணவர்களின் தன்னம்பிக்கை திருவிழாவாக சென்னையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு மாணவர்களை வாழ்த்திப் பேசியவர்களுள் 'சரவணா ஸ்டாக்ஸ்' நிறுவனத்தின் மேலாண் இயக்குநர் திரு. டி. சத்தியமூர்த்தி அவர்களின் உரை அனைவரின் நெஞ்சத்தையும் நெகிழச் செய்தது.

அவரை மேடைக்கு அறிமுகம் செய்தபோது ஆனந்தம் அமைப்பினர் நெகிழ்ச்சியுடன் ஒரு விஷயத்தைக் குறிப்பிட்டனர்:Image 1636272'வருடாவருடம் 10 ஏழை மாணவர்களைத் தத்தெடுத்துப் படிக்க வைக்கும் இவர், எந்தப் படிப்பு படிக்கும் மாணவர்களுக்கு அதிகம் செலவாகுமோ ... அந்த 10 மாணவர்களை எனக்குத் தாருங்கள்!' என்று கேட்டு வாங்கிப் படிக்க வைப்பவர். இத்தகைய கருணை மனம் யாருக்கு வரும்!'

பின்னர் மேடையில் உரையாற்றிய திரு. சத்தியமூர்த்தி, ஒரு அதிகாரப்பூர்வ பேச்சாளராக அல்லாமல், மாணவர்களிடம் ஒரு குடும்ப உறுப்பினரைப் போல மிக எளிமையாகவும் நட்புடனும் பேசி அனைவரது மனதையும் வென்றார்.

அவர் பேசுகையில்:

'நான் மிக மிகச் சாதாரணமானவன். இதே சென்னை நகரில், எளிய பின்புலத்தைக் கொண்ட குடும்பத்தில்தான் வளர்ந்தேன். நம் குடும்பங்களின் கஷ்டங்கள், வறுமை அனைத்திற்கும் ஒரே தீர்வு 'கல்வி' மட்டுமே என்பதில் நான் உறுதியாக இருந்தேன்.

படித்து முடித்து, தொழிற்துறையின் நெளிவுசுளிவுகளைக் கற்றுத் தேர்ந்து சம்பாதிக்கத் தொடங்கியதும் நான் செய்த முதல் வேலை—படிக்க வசதியில்லாத மாணவர்களைப் படிக்க வைத்ததுதான். அகரம் அறக்கட்டளை முதல் ஆனந்தம் அறக்கட்டளை வரை தொடர்ந்து உதவி வருகிறேன். உண்மையில், இவர்களைப் போன்ற தகுதியான மாணவர்களுக்குக் கரம்கொடுத்து தூக்கிவிட வேண்டும் என்பதற்காகத்தான் நான் தினமும் கடுமையாக உழைக்கிறேன்!' என்று உணர்ச்சிப்பூர்வமாகப் பேசினார்.

மாணவர்களின் கரவொலியால் அரங்கம் அதிர்ந்த இந்நிகழ்வு, கல்வி ஒன்றே வறுமையை விரட்டும் பேராயுதம் என்பதை மீண்டும் ஒருமுறை மெய்ப்பிப்பதாக அமைந்தது.

-எல்.முருகராஜ்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us