sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், ஜனவரி 08, 2026 ,மார்கழி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

தினம் தினம்

/

டவுட் தனபாலு

/

 'டவுட்' தனபாலு

/

 'டவுட்' தனபாலு

 'டவுட்' தனபாலு

 'டவுட்' தனபாலு

3


PUBLISHED ON : ஜன 06, 2026 01:47 AM

Google News

PUBLISHED ON : ஜன 06, 2026 01:47 AM

3


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தமிழக பள்ளிக்கல்வி துறை அமைச்சர் மகேஷ்: தமிழகத்தில் அரசு ஊழியர்களின் கோரிக்கையை, 2003ம் ஆண்டுக்கு பின், நிறைவேற்றாமல் இருந்துள்ளனர். தொடர்ச்சியாக ஆட்சி செய்தவர்கள், அரசு ஊழியர்களின் நீண்டகால கோரிக்கையை நிறைவேற்ற தவறி விட்டனர். 22 ஆண்டுகளாக நிலுவையில் இருந்த ஒரு கோரிக்கை தற்போது நிறைவேற்றப்பட்டு உள்ளது. அப்படி இருக்கும்போது, உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டம் பற்றி பேசுவதற்கும், கேள்வி எழுப்புவதற்கும் யாருக்கும் தகுதி இல்லை.

டவுட் தனபாலு: அரசு ஊழியர்களின், 22 ஆண்டு கோரிக்கை நிறைவேறியிருக்கு என்பது வாஸ்தவம் தான்... ஆனா, 2006 - 2011 வரை, தமிழகத்தில் தி.மு.க., ஆட்சி நடந்து, கருணாநிதி முதல்வரா இருந்தாரே... அரசு ஊழியர்கள் கோரிக்கையை நிறைவேற்ற தவறியதில் அவருக்கும் பங்கிருப்பதை ஏத்துக்குறீங்களோ என்ற, 'டவுட்' வருதே!



அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு: தி.மு.க., ஆட்சி மீது மக்களுக்கு வெறுப்பும், விரக்தியும் நிறைந்துள்ளது. 100 நாள் வேலை திட்டம் குறித்து, தி.மு.க., என்ன தான் சொன்னாலும், மக்கள் நம்ப மாட்டார்கள். 100 நாள் வேலையை, 125 நாட்களாக மத்திய அரசு அறிவித்துள்ளது. அ.தி.மு.க., ஆட்சி அமைந்ததும், அதை, 150 நாட்களாக உயர்த்துவோம்.

டவுட் தனபாலு: வேலை நாட்களை உயர்த்திய மத்திய பா.ஜ., அரசு, அதற்கான சம்பளத்தில் 40 சதவீதத்தை மாநில அரசே ஏத்துக்கணும்னு, சுமையை துாக்கி வச்சிருக்கு... இது, மாநில அரசுக்கு கடும் நிதி நெருக்கடியை ஏற்படுத்துமே... ஆனாலும், 'நாம ஆட்சிக்கு வந்தால் பார்த்துக்கலாம்'னு அதை கண்டுக்காம இருக்கீங்களோ என்ற, 'டவுட்' தான் வருது!

l

தமிழக வெற்றிக் கழகம் கட்சியின், மாநில நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன்: எம்.ஜி.ஆர்., போலவே விஜய்க்கு மக்களிடம் நல்ல வரவேற்பு உள்ளது. 2026 சட்டசபை தேர்தலுக்கு பின், தமிழகத்தின் நிரந்தர முதல்வர் விஜய் தான். ஒரு படத்துக்கு, 250 கோடி ரூபாய்; ஆண்டுக்கு நான்கு படம் நடித்தால், ௧,௦௦௦ கோடி ரூபாய் பெறும் விஜய், மக்களுக்காக அதை துாக்கி எறிந்து விட்டு அரசியலுக்கு வந்துள்ளார்.

டவுட் தனபாலு: பா.ஜ., - அ.தி.மு.க., கூட்டணிக்கு வர மறுக்கும் விஜயை எப்படி வளைக்கலாம்னு, மத்திய பா.ஜ., அரசு யோசிக்கிறதா சொல்றாங்க... 'படத்துக்கு, 250 கோடி ரூபாய் சம்பளம் வாங்கினார்'னு, வருமான வரித்துறைக்கு நீங்களே, 'எடுத்து' கொடுக்கிறீங்களோ என்ற, 'டவுட்' வருதே!






      Dinamalar
      Follow us