தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/டவுட் தனபாலு/ 'டவுட்' தனபாலு

 'டவுட்' தனபாலு

 'டவுட்' தனபாலு


PUBLISHED ON : பிப் 04, 2026 04:43 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : பிப் 04, 2026 04:43 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் சீனிவாசன்: புதிதாக கட்சி துவக்கிய நடிகர் விஜயின் செயல்கள், பயங்கர, 'பில்டப்'பாகவும், ஏற்றுக்கொள்ள முடியாததாகவும் உள்ளன. கட்சி துவங்கிய உடனேயே, 'நானே முதல்வர்; ஆட்சியில் பங்கு' என விஜய் அளந்து விடுகிறார். படங்களில் விஜய் நடித்ததற்கு வாங்கிய சம்பளம் எவ்வளவு, அதில் வரி கட்டிய வெள்ளை பணம் எவ்வளவு, வரி கட்டாத கருப்பு பணம் எங்குள்ளது?

டவுட் தனபாலு: உங்க கட்சிக்கும், தி.மு.க.,வுக்கும் ஆட்சி அமைக்கும் வாய்ப்பு இருக்கு... அதனால, ஆட்சியில் பங்கு குடுக்க முடியாது என்பதில் உறுதியா இருக்கீங்க... ஆனா, விஜய்க்கு அப்படியில்லையே... ஆட்சி அமைக்கும் வாய்ப்பு கிடைச்சால் தானே, பங்கு பத்தி எல்லாம் யோசிக்கணும்னு விஜய், 'அளந்து' விடுறாரோ என்ற, 'டவுட்' தான் வருது!

தமிழக காங்., மேலிட பொறுப்பாளர் கிரிஷ் ஷோடங்கர்: காங்கிரஸ் கட்சி தமிழகத்தில் நன்கு வளர்ந்துள்ளதோடு, வலுவாக உள்ளதால் தான், தமிழகத்தில் புதிதாக துவங்கிய கட்சிகளும், எங்களுடன் கூட்டணி வைக்க விரும்புகின்றன. விரைவில் தி.மு.க., சார்பில் குழு அமைக்கப்பட்டு, தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுக்கு அழைத்ததும், காங்கிரஸ் சார்பில் அமைக்கப்பட்டிருக்கும் குழு சென்று, அவர்களோடு பேச்சு நடத்தும். பேச்சு நல்லபடியாக முடியும் என நம்புகிறோம்.



டவுட் தனபாலு: உங்க கட்சியில் தொண்டர்களை விட, தலைவர்கள் எண்ணிக்கை தான் அதிகம் என்பதில், 'டவுட்'டே இல்லை... அதுதான், கட்சி வலுவா இருப்பது போன்ற ஒரு மாயை ஏற்படுத்துது... தேர்தலில் நீங்க தனித்து போட்டியிட்டால், உங்க நிஜமான பலம் அம்பலமாகிடும் என்பதிலும், 'டவுட்'டே இல்லை!

அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் செல்லுார் ராஜு: தமிழகத்தில் மது விற்பனை, பயன்பாடு அதிகரித்துள்ளது. அ.தி.மு.க., மீண்டும் ஆட்சிக்கு வந்ததும், மதுக்கடைகளை அகற்ற உத்தரவிடப்படும். அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி மீண்டும் முதல்வரானதும், போடும் முதல் கையெழுத்து, மதுக்கடைகளை மூடுவதாகத் தான் இருக்கும். தமிழகத்தில் ஒரு சொட்டு மது கூட இல்லாத அளவுக்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

டவுட் தனபாலு: தமிழகத்தில் பூரண மதுவிலக்கு என வாக்குறுதி தந்ததால் தான், 2016 சட்டசபை தேர்தலில் தி.மு.க.,வால் ஆட்சிக்கு வர முடியலை என்ற வரலாறு உங்களுக்கு மறந்து போயிடுச்சா... இப்படி எல்லாம் ஏடாகூடமா வாக்குறுதி தந்தால், மதுவுக்கு பழகி போயிட்ட, 'குடி'மகன்கள் ஒட்டுமொத்தமா உங்க கட்சியை புறக்கணிச்சிடுவாங்க என்பதில், 'டவுட்'டே இல்லை!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us