தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/டவுட் தனபாலு/ 'டவுட்' தனபாலு

 'டவுட்' தனபாலு

 'டவுட்' தனபாலு


PUBLISHED ON : பிப் 05, 2026 04:02 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : பிப் 05, 2026 04:02 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ: 'பாலஸ்தீனத்துக்கு தனி நாடு அந்தஸ்து வேண்டும்' என, முன்னாள் பிரதமர் நேரு காலத்தில் இருந்தே வலியுறுத்தி வந்துள்ளோம். ஆனால், மோடி ஆட்சிக்கு வந்த பின்தான், இஸ்ரேலுக்கு ஆதரவான நிலைப்பாடு எடுக்கப்பட்டுள்ளது. பாலஸ்தீனத்துக்கு ஐ.நா.,வில் இந்தியா குரல் கொடுக்கவில்லை. பிரதமர் மோடிக்கு நாட்டில் நல்ல பெயரே இல்லை. ஆனால், ஏதேதோ ஏற்பாடுகளை செய்து, நல்ல பெயர் வாங்கி விடுகிறார்.

டவுட் தனபாலு: உங்க கட்சிக்கும் கூடத்தான் தமிழகம் முழுக்க தொண்டர்களே இல்லை... ஆனாலும், ஆளுங்கட்சிக்கு ஆமாம் சாமி போட்டு, அஞ்சாறு சீட்களை வாங்கி, சட்டசபைக்குள்ள போயிடுறது இல்லையா... அரசியல்ல இதெல்லாம் சகஜம்தான் என்பதில், 'டவுட்'டே இல்லை!

இந்திய கம்யூ., கட்சி மாநில செயலர் வீரபாண்டியன்: 'தி.மு.க., கூட்டணியில் உள்ள கம்யூனிஸ்ட்கள் மக்கள் பிரச்னைகளுக்காக ஏன் போராடவில்லை?' என, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி கேட்கிறார். முதல்வரை சந்திக்கும் போதெல்லாம், பிரச்னைகளை தீர்க்க சொல்லிதான் கோரிக்கை விடுக்கிறோம். ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் பிரச்னை குறித்தும் பேசியிருக்கிறோம்.

டவுட் தனபாலு: கம்யூ.,க்கள் என்றாலே போராட்டம் தான் நினைவுக்கு வரும்... ஆனாலும், கடந்த நாலே முக்கால் வருஷமா, தமிழக அரசுக்கு எதிரா பெருசா எந்த போராட்டங்களையும் நீங்க நடத்தலையே... முதல்வரை நீங்க சந்திச்சு வலியுறுத்தி, எத்தனை பிரச்னைகளை தீர்த்து வச்சிருக்கீங்க என்பதை பட்டியல் போட முடியுமா என்ற, 'டவுட்' வருதே!

பத்திரிகை செய்தி: சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட் குறித்து, தமிழக வெற்றிக் கழகம் கட்சி தலைவர் விஜய் எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. இது தொடர்பாக, சமூக வலைதளங்களில் கண்டனங்கள் பரவியதை அடுத்து, அக்கட்சியின் துணை பொதுச்செயலர் நிர்மல்குமார், மத்திய பட்ஜெட்டில் வெற்று அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளதாக விமர்சனம் செய்துள்ளார்.

டவுட் தனபாலு: கரூரில், 41 பேர் பலியான வழக்கில், ஏற்கனவே ரெண்டு முறை சி.பி.ஐ., விசாரணைக்காக விஜய் டில்லி போயிட்டு வந்துட்டாரு... ஜனநாயகன் படம் வேற ரிலீசாகாம தொங்கல்ல கிடக்குது... 'இப்ப போய் மத்திய பட்ஜெட்டை குறை சொல்லி, வேலியில் போற ஓணானை எடுத்து மடியில் விட்டுக்கணுமா'ன்னு விஜய் நினைச்சிட்டாரோ என்ற, 'டவுட்'தான் வருது!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us