sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/தினம் தினம்/டவுட் தனபாலு/ 'டவுட்' தனபாலு

 'டவுட்' தனபாலு

 'டவுட்' தனபாலு


PUBLISHED ON : பிப் 08, 2026 02:02 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : பிப் 08, 2026 02:02 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தே.மு.தி.க., பொதுச் செயலர் பிரேமலதா: தமிழக சட்டசபை தேர்தலில், 234 தொகுதிகளிலும், புதுச்சேரியில், 30 தொகுதிகளிலும், தே.மு.தி.க., சார்பில் போட்டியிட விரும்புவோர், வரும் 12ம் தேதி வரை விருப்ப மனுக்கள் அளிக்கலாம். தமிழகத்தில் பொது தொகுதியில் போட்டியிட, 15,000 ரூபாயும், தனி தொகுதிக்கு, 10,000 ரூபாயும் விண்ணப்ப கட்டணம். புதுச்சேரியில் பொது தொகுதிக்கு, 10,000 ரூபாயும், தனி தொகுதிக்கு, 5,000 ரூபாயும் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

டவுட் தனபாலு: கூட்டணியில், ஒற்றை இலக்கத்தில் வாங்க போற சீட்களுக்கு, 264 தொகுதிகளுக்கும் சேர்த்து விருப்ப மனுக்கள் வாங்கும் உங்க தைரியத்தை, 'டவுட்' இல்லாம பாராட்டலாம்... 264 தொகுதிகளுக்கும் உங்க கட்சியினர் போட்டி போட்டு மனுக்கள் தர்றதை பார்த்துட்டு, பெரிய கட்சிகள் உங்களை கூட்டணியில் சேர்த்துக்க ஓடோடி வரும்னு நம்புறீங்களோ என்ற, 'டவுட்'டும் சேர்ந்தே வருது!l

தமிழக வெற்றிக் கழகம் கட்சி தலைவர் விஜய்: த.வெ.க., தேர்தல் அறிக்கை, ஆட்சி மாற்றத்தை நோக்கி இருக்கும். அதற்காக தயாராகும் எங்களின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற வேண்டியவை குறித்து, எங்கள் கட்சியின் தேர்தல் அறிக்கை தொடர்பான இணையதளத்தில், பொதுமக்கள் தங்கள் பரிந்துரைகளை அனுப்பலாம்.

டவுட் தனபாலு: ஆட்சியை பிடிக்கணும்னு இலவச திட்டங்களா வாரி விட்டுறாதீங்க... அ.தி.மு.க.,வும், தி.மு.க.,வும் மாறி மாறி இலவசங்களை குடுத்து தான், தமிழகம் இன்னைக்கு, 9.50 லட்சம் கோடி ரூபாய் கடன்ல மூழ்கியிருக்கு... இந்த கடன்களை அடைக்கிற விதமா, உங்க தேர்தல் அறிக்கையில் திட்டங்களை தந்தா, 'டவுட்' இல்லாம உங்களை பாராட்டலாம்!

தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன்: மதுரை ஜீவா நகரில், ஐந்து பள்ளி மாணவர்கள் பெட்ரோல் குண்டு வீசியதுடன், கைகளில் பயங்கர ஆயுதங்களுடன், தெருக்களில் உலவும் காட்சிகள், நெஞ்சை பதைபதைக்க வைக்கின்றன. அரசு பள்ளிகளும், அதில் படிக்கும் மாணவர்களும், கெட்டு சீரழிந்து கொண்டிருப்பதை காணும் நமக்கு தான் நெஞ்சம் பதறுகிறதே தவிர, பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் மகேஷ், சாவகாசமாக கையை கட்டிக்கொண்டு வேடிக்கை பார்ப்பது வெட்கக்கேடானது.

டவுட் தனபாலு: துணை முதல்வர் உதயநிதியுடன் நிழல் போல பயணித்தும், அவரது புகழ் பாடியும் பொழுதை போக்கும் அமைச்சருக்கு, இதுக்கெல்லாம் நேரம் இருக்குமா என்பது, 'டவுட்'தான்... அந்த மாணவர் களின் பெற்றோர் தான், தங்களது பிள்ளைகளை திருத்தணும் என்பதில், 'டவுட்'டே இல்லை!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us