sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், பிப்ரவரி 11, 2026 ,தை 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

தினம் தினம்

/

டவுட் தனபாலு

/

 'டவுட்' தனபாலு

/

 'டவுட்' தனபாலு

 'டவுட்' தனபாலு

 'டவுட்' தனபாலு

2


PUBLISHED ON : பிப் 10, 2026 03:10 AM

Google News

PUBLISHED ON : பிப் 10, 2026 03:10 AM

2


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்: தேர்தல் சமயத்தில், ஒரே நேரத்தில், இரண்டு கட்சிகளுடன், கூட்டணி பேசுவது அருவருக்கத்தக்கது. பேரம் பேசுவது, எந்த மாதிரியான அணுகுமுறை என்பதை, இளம் தலைமுறையினர் சிந்திக்க வேண்டும். மக்களுக்கான அரசியல் என்று ஒன்று இல்லவே இல்லை. இதை மாற்றவே நாங்கள் விரும்புகிறோம். அதற்காகத்தான், கூட்டணி இல்லாமல், தொடர்ந்து தனித்து களம் காண்கிறோம்.

டவுட் தனபாலு: ராமதாஸ் தலைமையிலான பா.ம.க., மற்றும் தே.மு.தி.க., ஆகிய கட்சிகளைத் தான், நீங்க பெயர் குறிப்பிடாம விமர்சிக்கிறீங்க என்பது, 'டவுட்' இல்லாம தெரியுது... அதே நேரம், யார்கிட்டயும் பேரம் பேசாம, வெற்றியோ, தோல்வியோ தனித்து தான் போட்டி என்ற உங்க நிலைப்பாட்டையும், 'டவுட்' இல்லாம பாராட்டலாம்!



தமிழக துணை முதல்வர் உதயநிதி: அரசியல் அறிவே இல்லாதோர் உளறினாலும், புலம்பினாலும், களத்தில் நின்று ஜெயிக்கக்கூடிய கட்சி தி.மு.க., தான். வரும் சட்டசபை தேர்தலில், தி.மு.க., வேட்பாளர்கள் பட்டியலில், இளைஞர்களுக்கு அதிக வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை, முதல்வர் ஸ்டாலினிடம் வைத்துள்ளேன். அதை செய்வார் என நம்புகிறேன்.

டவுட் தனபாலு: வேட்பாளர் பட்டியலையே நீங்கதான் தயாரிக்க போறதா, தி.மு.க.,வுல எல்லாரும் பேசிக்கிறாங்க... ஆனாலும், 'அப்பாவிடம் கோரிக்கை வச்சிருக்கேன்'னு வெளியில சொல்றது, தன்னடக்கமா அல்லது நாளைக்கு சீட் கிடைக்காதவங்களிடம், 'அப்பாகிட்ட கேட்டேன்... தர மறுத்துட்டார்'னு சமாளிக்கவா என்ற, 'டவுட்' எழுதே!

பத்திரிகை செய்தி: ' போர்க் களத்தில் எதிரியை வீழ்த்த, அவர்கள் எடுக்கும் ஆயுதத்தையே நாமும் எடுக்க வேண்டும்; அதேபோல் சட்டசபை தேர்தலில், தி.மு.க., பாணியில், 'கவனிப்பு' வேலைகளை செய்தால், பா.ஜ., போட்டியிடும் தொகுதிகளில் வெற்றி உறுதி செய்யப்படும்' என, மேலிடத் தலைவர்களிடம் தமிழக பா.ஜ., நிர்வாகிகள் வலியுறுத்தி உள்ளனர்.

டவுட் தனபாலு: வாஸ்தவம் தான்... என்னதான் திட்டங்கள், சலுகைகள், தேர்தல் வாக்குறுதிகளை வண்டி, வண்டியா அள்ளிவிட்டாலும், கடைசி நேர பண பட்டுவாடாவுக்கு தான் நிறைய வாக்காளர்கள் முக்கியத்துவம் தருவாங்க... அதனால, ஆளுங்கட்சியினர் பொன் வைக்கிற இடத்துல, நாம பூவையாவது வைக்கணும்னு பா.ஜ.,வினர் நினைக்கிறாங்களோ என்ற, 'டவுட்'தான் வருது!






      Dinamalar
      Follow us