தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/டவுட் தனபாலு/ 'டவுட்' தனபாலு

 'டவுட்' தனபாலு

 'டவுட்' தனபாலு


PUBLISHED ON : பிப் 13, 2026 12:40 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : பிப் 13, 2026 12:40 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தமிழக காங்., மேலிட பொறுப்பாளர் கிரிஷ் ஷோடங்கர்: தமிழக காங் கிரஸ் சார்பில், தி.மு.க.,வுடன் தொகுதி பங்கீடு குறித்து பேச்சு நடத்த, கடந்த நவம்பரில் குழு அமைத்தோம். உடனே, முதல்வர் ஸ்டாலினையும் சந்தித்தோம். 70 நாட்களுக்கு மேல் ஆகிவிட்டது. எனவே, உடனடியாக எங்களை அழைத்து பேச வேண்டும். தாமதப்படுத்துவதால், எங்களுக்கு மனம் வலிக்கிறது. ஆயினும் யார் மீதும் எங்களுக்கு கோபம் இல்லை.

டவுட் தனபாலு: முன்னாள் முதல்வர் ஜெ., உயிருடன் இருந்தப்ப, அ.தி.மு.க., கூட்டணி கட்சிகளுக்கு இப்படித்தான் தண்ணி காட்டுவாங்க... ஒரு பக்கம் பேச்சு நடத்திக்கிட்டே, மறுபக்கம் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு, கூட்டணி தலைவர்களை மண்டை காய விடுவாங்க... அவங்க வழியில் தற்போது முதல்வர் ஸ்டாலினும் பயணிக்கிறாரோ என்ற, 'டவுட்' உங்களுக்கு வரலையா?

விருகம்பாக்கம் தொகுதி தே.மு.தி.க., தேர்தல் பொறுப்பாளர் மாரி: விருப்ப மனு வினியோகம் துவங்கியும் யாரும் வராததால், தே.மு.தி.க., தலைமை அலுவலகம் வெறிச்சோடியதாக செய்திகள் வெளியாகின்றன. இதை பார்த்து, எனக்கு மிகவும் கோபம் வருகிறது. மறுபடியும் சொல்கிறேன்... இது சரியில்லை. எனக்கு சிறை புதிதல்ல; மூன்று முறை சிறைக்கு சென்றுள்ளேன். அதுவும், பத்திரிகையாளர்களை அடித்துதான் சிறைக்கு சென்றேன். பத்திரிகையாளர்களை, நாளை வீடு புகுந்து அடிக்க வேண்டிய சூழ்நிலை வந்துவிடும்.

டவுட் தனபாலு: எந்த கூட்டணியில் சேர்ந்தாலும், உங்க கட்சிக்கு அதிகபட்சம், 10 சீட்கள் தந்தாலே பெரிய விஷயம்... அந்த பத்தும் எந்தெந்த தொகுதிகள்னு தெரியாம, 'தமிழகம் முழுக்க விருப்ப மனு போடுங்க; அதுக்கும், 15,000 ரூபாய் கட்டணம்'னு அறிவிச்சா யாராவது வருவாங்களா... இதை யோசிக்காம, பத்திரிகையாளர்கள் மீது பாய்வது சரியா என்ற, 'டவுட்' வருதே!

வி.சி., கட்சி துணை பொதுச்செயலர் வன்னியரசு: 'பா.ம.க., நிறுவனர் ராமதாஸ், வி.சி., கொடியை ஏற்றியுள்ளார். வன்னியர் சங்க கொடியை திருமாவளவன் ஏற்றியுள்ளார். தேவை என்றால் ஒருவரையொருவர் சந்தித்து பேசி பிரச்னையை சரி செய்து விடுவர்' என தமிழக காங்., தலைவர் செல்வப்பெருந்தகை கூறியுள்ளார். அரசியல் ஆதாயத்திற்காக, விளம்பர நோக்கத்துடன் அவர் செயல்படுகிறார். திருமாவளவனுக்கு ஆலோசனை சொல்லும் அளவுக்கு செல்வப் பெருந்தகை வளரவில்லை.

டவுட் தனபாலு: 'செல்வப்பெருந்தகை, நம்ம கட்சியில் இருந்தப்ப, திருமாவளவன் தலைமையின் கீழ் செயல்பட்டார்... இப்ப ஒரு கட்சிக்கு மாநில தலைவராகி, நம்ம தலைவருக்கே அறிவுரை சொல்றதா'ன்னு கடுப்பாகிட்டீங்களோ என்ற, 'டவுட்'தான் வருது!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us