தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/டவுட் தனபாலு/ 'டவுட்' தனபாலு

 'டவுட்' தனபாலு

 'டவுட்' தனபாலு


PUBLISHED ON : பிப் 14, 2026 01:32 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : பிப் 14, 2026 01:32 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அ.தி.மு.க., பொதுச் செயலர் பழனிசாமி: 'ஆட்சியில் பங்கு இல்லை' என, முதல்வர் ஸ்டாலின் கூறியது, தி.மு.க.,வுக்கும், காங்கிரசுக்கும் உள்ள பிரச்னை. இந்த பிரச்னை, அ.தி.மு.க., கூட்டணியில் இல்லை. ஆனால், ஸ்டாலின் கூறியதற்கு, காங்கிரஸ் எம்.பி., பதிலடி கொடுத்துள்ளார். தி.மு.க., - காங்கிரஸ் கூட்டணியில் குழப்பம் இருப்பதையே, இது காட்டுகிறது. அ.தி.மு.க., பெரும்பான்மையான இடங்களில் போட்டியிட்டு வெற்றி பெறும்.

- டவுட் தனபாலு: தமிழகத்தில், பெரும்பான்மை பெற்று ஆட்சியை பிடிக்க, 118 தொகுதிகளில் ஜெயிக்கணும்... குறைஞ்சது, 150 தொகுதிகளில் அ.தி.மு.க., போட்டியிட்டால் தான் இது சாத்தியம்... உங்களது கருத்தை பார்த்தால், 'மீதமுள்ள 84 தொகுதிகள் தான் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்படும்'னு கோடிட்டு காட்டுறீங்களோ என்ற, 'டவுட்'தான் வருது!

இந்திய ஜனநாயக கட்சியில் இருந்து விலகிய, லீமாரோஸ் மார்ட்டின்: கடந்த 2012- முதல், கட்சியில் அர்ப்பணிப்போடு பயணித்து வந்தேன். 2019 முதல், இணை பொதுச்செயலராக இருந்து, தமிழகம் முழுதும் கட்சியை வளர்த்தேன். நேரம் காலம் பார்க்காமல் உழைத்த எனக்கு, கட்சியில் உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை; இதனால், கட்சியில் இருந்து விலகுகிறேன். ஆனாலும், எனது அரசியல் பயணம், மக்கள் சேவை தொடரும்.

டவுட் தனபாலு: கிட்டத்தட்ட, 14 வருஷங்களா கட்சியை கஷ்டப்பட்டு வளர்த்தேன்னு சொல்றீங்களே... இந்த கட்சியில் நீங்க இருந்ததே, இப்ப விலகிய பிறகு தான் வெளியில தெரியுது... தண்ணீருக்குள் மூழ்கி நீச்சல் அடிக்கிற மாதிரி, யாருக்குமே தெரியாம எப்படி கட்சியை வளர்த்தீங்க என்ற, 'டவுட்' வருதே!

தமிழக முதல்வர் ஸ்டாலின்: நம் கட்சியினர், வீடுவீடாக சென்று இயல்பாக, சகஜமாக, உரிமையோடு பேசி பிரசாரம் செய்யுங்கள். சாதனைகளை எடுத்து சொன்னால், மக்கள் உணர்ந்து வரவேற்பர். ஆட்சிக்கு யார் வரக்கூடாது என்பதை மக்களுக்கு சொல்ல வேண்டும். தி.மு.க.,வை தவிர, வேறு யார் ஆட்சிக்கு வந்தாலும், அது பா.ஜ., ஆட்சியாகத் தான் இருக்கும்; வளர்ச்சி அரசியல் மாறி, கலவர அரசியல் தமிழகத்தில் நடக்கும்.

டவுட் தனபாலு: நாட்டில், உ.பி., - ம.பி., குஜராத், டில்லி, ராஜஸ்தான், கோவா, மஹாராஷ்டிரா, உத்தரகண்ட்னு பல மாநிலங்களில் பா.ஜ., ஆட்சிதானே நடக்குது... அங்க எல்லாம் கலவரமா நடக்குது... தேர்தலில் ஜெயிக்கிறதுக்காக, மக்கள் மத்தியில் பீதியை கிளப்புவது சரியா என்ற, 'டவுட்' வருதே!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us