தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/இது உங்கள் இடம்/பா.ஜ., வளர திறமையான தலைவர் வேண்டும்!

பா.ஜ., வளர திறமையான தலைவர் வேண்டும்!

பா.ஜ., வளர திறமையான தலைவர் வேண்டும்!

3


PUBLISHED ON : அக் 17, 2026 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 17, 2026 12:00 AM

3


3
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பொ.ஜெயராஜ், பாம்பனார், இடுக்கி மாவட்டம், கேரளாவில் இருந்து அனுப்பிய, ‘இ – மெயில்’ கடிதம்: தமிழக பா.ஜ., தலைவராக அண்ணாமலை இருந்த போது, கட்சி உயிரோட்டத்துடன் இருந்தது. ஒவ்வொரு நாளும் கட்சி அடுத்தக் கட்ட வளர்ச்சியை நோக்கி முன்னேறியது. தமிழகமெங்கும் பா.ஜ., கொடி பறந்தது; தொண்டர்கள் உற்சாகமாக கட்சிப் பணியாற்றி க் கொண்டிருந்தனர். ஆனால், அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி சொன்னார் என்பதற்காக, டில்லி மேலிடம் அண்ணாமலையை மாற்றி, நயினார் நாகேந்திரனை என்று தலைவராக நியமித்ததோ, அன்றிலிருந்தே, தமிழக பா.ஜ., வீழ்ச்சியை நோக்கி செல்ல ஆரம்பித்து விட்டது.

அண்ணாமலை தலைவராக இருந்த போது, பிரதமர் மோடி தமிழகத்திற்கு வரும்போதெல்லாம், அவருக்கான வரவேற்பு பிரமாண்டமாக இருக்கும். ஆனால், சமீபத்தில் பூந்தமல்லி- – வடபழனி மெட்ரோ ரயில் திட்டத்தை துவக்கி வைக்க, பிரதமர் சென்னை வந்தார். முதல்வர் விஜய், அவரை வரவேற்க விமான நிலையம் வந்தார்.

அவரை வரவேற்க கூடிய கூட்டத்தில், பா.ஜ.,வின் கொடிகளை விட, த.வெ.க., வின் கொடிகளே அதிகம் இருந்தன.

தமிழகத்தில், பா.ஜ., வளர வேண்டும் என்றால், ஜாதி அடிப்படையில் தலைவரை நியமிக்காமல், அண்ணாமலை போன்ற திறமையான ஒருவரை தலைவராக நியமிக்க, அகில இந்திய தலைமை முன்வர வேண்டும்!

lll

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us