தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/டவுட் தனபாலு/ 'டவுட்' தனபாலு

 'டவுட்' தனபாலு

 'டவுட்' தனபாலு


PUBLISHED ON : பிப் 15, 2026 05:51 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : பிப் 15, 2026 05:51 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பா.ம.க., தலைவர் அன்புமணி: தமிழகத்தில், 2021ல், 198 மனமகிழ் மன்றங்கள் மட்டுமே இருந்தன. ஐந்தாண்டு கால தி.மு.க., ஆட்சியில் மட்டும், 1,000 மனமகிழ் மன்றங்கள் திறக்கப்பட்டுள்ளன. ஒரு மனமகிழ் மன்றத்திற்கு உரிமம் வழங்க, 2 கோடி ரூபாய் வரை லஞ்சம் வசூலிப்பதாக, 'டாஸ்மாக்' அதிகாரிகள் குற்றம் சாட்டியுள்ளனர். மனமகிழ் மன்றங்கள், தி.மு.க., ஆட்சியில் தனியார் மதுக்கடை களாகவே மாற்றப்பட்டு விட்டன .

டவுட் தனபாலு: அது சரி... '500, டாஸ்மாக் கடைகளை மூடிட்டோம்'னு ஒருபக்கம் சொல்லிட்டு, மறுபக்கம் இரண்டு மடங்கா தனியார் பார்களுக்கு அனுமதி குடுத்துட்டாங்களே... அடுத்த அஞ்சு வருஷம் தி.மு.க., ஆட்சி நீடித்தால், டாஸ்மாக்கை இழுத்து மூடிட்டு, பழையபடி தனியார் வசம் மதுபான விற்பனையை தாரை வார்த்துடுவாங்களோ என்ற, 'டவுட்'தான் வருது!

lll



பத்திரிகை செய்தி: த.வெ.க., திருவண்ணாமலை கிழக்கு மாவட்ட செயலர் உதயகுமார், தன் பிறந்த நாளை, வந்தவாசி பிரதான சாலையில் கொண்டாடினார்; திறந்த காரில், தன் ஆதரவாளர்களுடன் வலம் வந்தவருக்கு, 'கிரேன்' உதவியுடன் மாலை அணிவிக்கப்பட்டது. அதோடு, சாலையில் த.வெ.க.,வினர் பட்டாசு வெடித்தனர். இதனால், அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, பொதுமக்கள் சிரமத்திற்கு உள்ளாகினர்.

டவுட் தனபாலு: தமிழகத்தை ஆண்ட மற்றும் ஆளும் கட்சியான அ.தி.மு.க., - தி.மு.க.,வின் இரண்டாம் கட்ட தலைவர்கள், அமைச்சர்கள் கூட இப்படி ஆடம்பரமா பிறந்த நாளை கொண்டாடியது இல்லையே... இந்த உதயகுமார் தேர்தலில் ஜெயித்து எம்.எல்.ஏ.,வாகிட்டா, தொகுதி மக்கள் கதி என்னவாகும் என்ற, 'டவுட்' எழுதே!

lll

தர்மபுரி தி.மு.க., - எம்.பி., மணி: தி.மு.க.,வினர் வீடு வீடாக சென்று, மகளிர் உரிமைத்தொகை, இலவச பஸ் பயணம், புதுமைப்பெண் திட்டம் என ஏராளமான திட்டங்களை எடுத்து கூற வேண்டும். இப்படி நீளமாக தி.மு.க., அரசின் சாதனைகளை சொல்லும்போது, மக்களுக்கு துாக்கம் வந்துவிடும்; அதனால், அவர்கள் துாங்காத அளவுக்கு, 'பாயின்ட் பை பாயின்டாக' எடுத்து சொல்ல வேண்டும். எப்போதும் மக்களை விழிப்பாகவே வைத்திருக்க வேண்டும்.

டவுட் தனபாலு: நீங்க, நிறைவேற்றிய வாக்குறுதிகளை சொல்லி ஓட்டு கேட்கணும்னு சொல்றீங்க... ஆனா, நிறைவேற்றாத வாக்குறுதிகளை பட்டியல் எடுத்து வச்சிருக்கும் மக்கள், 'இதை எல்லாம் ஏன் செய்யல'ன்னு உங்களிடம் கேட்க விழிப்புணர்வுடன் தயாரா இருக்காங்க என்பதில், 'டவுட்'டே இல்லை!

lll

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us