தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/டவுட் தனபாலு/ 'டவுட்' தனபாலு

 'டவுட்' தனபாலு

 'டவுட்' தனபாலு


PUBLISHED ON : பிப் 18, 2026 01:59 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : பிப் 18, 2026 01:59 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மனித நேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா: தி.மு.க., கூட்டணியில், மனித நேய மக்கள் கட்சிக்கு ஐந்து தொகுதிகள் ஒதுக்குமாறு கேட்டுள்ளோம். கடந்த தேர்தலில், தி.மு.க., ஒதுக்கிய மணப்பாறை, பாபநாசம் தொகுதிகளில் நாங்கள் வெற்றி பெற்றோம். எனவே, ஐந்து தொகுதிகள் கோரிக்கையை, தி.மு.க., தலைமை பரிசீலிக்கும் என எதிர்பார்க்கிறோம்.

டவுட் தனபாலு: நீங்க குடுத்த ரெண்டு தொகுதிகள்லயும் ஜெயிச்சிட்டீங்க... ஆனா, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு, 2021ல் தி.மு.க., ஒதுக்கிய மூன்று தொகுதிகளிலுமே தோத்து போயிட்டாங்க... 'அவங்க தொகுதிகளையும் எங்களிடம் சேர்த்து குடுத்துடுங்க'ன்னு மறைமுகமா கேட்கிறீங்களோ என்ற, 'டவுட்' தான் வருது!



அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி: மோசமான தி.மு.க., ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கும் தேர்தல் இது. 'டாஸ்மாக்'கில் பாட்டிலுக்கு, 10 ரூபாய் கூடுதலாக வாங்கப்படுவதன் வழியே, ஐந்து ஆண்டுகளில், 23,000 கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளது. அ.தி.மு.க., ஆட்சிக்கு வந்தவுடன், தி.மு.க.,வின் ஊழல்கள் குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும்.

டவுட் தனபாலு: முதல்வர் ஸ்டாலினும், ஆட்சிக்கு வரும் முன், 'அ.தி.மு.க.,வினர் ஊழல்கள் மீது நடவடிக்கை எடுப்பேன்'னு தான் சொன்னாரு... ஆனா, அவரது அஞ்சு வருஷ ஆட்சியில், உங்க கட்சியின் முன்னாள் அமைச்சர்கள் யார் மீதாவது நடவடிக்கை எடுத்தாரா... 'நான் அடிக்கிற மாதிரி அடிப்பேன்; நீ அழுவது மாதிரி நடி'ன்னு, உங்க ரெண்டு கட்சிகளுக்கும் இடையில் எழுதப்படாத ஒப்பந்தம் ஏதும் இருக்குமோ என்ற, 'டவுட்' தான் வருது!



தமிழக துணை முதல்வர் உதயநிதி: தமிழகத்தில் யாருக்கும் எந்த பயனும் இல்லாமலும், கொள்கை, லட்சியம், கோட்பாடு எதுவும் இல்லாமலும், தெரியாமலும் ஒரு கோஷ்டியினர் சுற்றிக் கொண்டு இருக்கின்றனர். அரசியல் ஒரு பொழுதுபோக்கு என்று நினைத்துக் கொண்டுள்ளனர். அரசியல் என்பது மக்கள் பணி; அர்ப்பணிப்பு இல்லாமல் யாராலும் சாதிக்க முடியாது. அரசியல் அறிவே இல்லாத அடிமைகளும், அட்டை கத்திகளும் என்னதான் புலம்பினாலும், வெற்றி பெறுவது உதயசூரியன் தான்.

டவுட் தனபாலு: ஆழ்ந்த அரசியல் அறிவுடனும், அர்ப்பணிப்புடனும் உங்க கட்சிக்கு, 60 ஆண்டுகளுக்கும் மேலாக உ ழைச்சவர் துரைமுருகன்... ஆனா, அவரை துணை முதல்வராக்காம, உங்களை ஏன் ஆக்கினாங்க... துரைமுருகனை விட உங்களுக்கு அரசியல் அறிவும், அர்ப்பணிப்பு உணர்வும் அதிகம் என்பதாலா என்ற, 'டவுட்' வருதே!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us