தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/டவுட் தனபாலு/ 'டவுட்' தனபாலு

 'டவுட்' தனபாலு

 'டவுட்' தனபாலு


PUBLISHED ON : பிப் 21, 2026 02:59 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : பிப் 21, 2026 02:59 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசிய தலைவர் காதர் மொய்தீன்: ஆட்சி, அதிகாரத்தில் பங்கு வேண்டும் என்பது எங்கள் கோரிக்கை அல்ல. ஏனெனில், தி.மு.க., அரசு எங்களுக்கு அனைத்திலும் பங்கு கொடுக்கிறது; பங்கு கொடுக்காமல் எங்களை ஒதுக்கவில்லை. காங்கிரசில் ஒரு சிலர், ஆட்சியில் பங்கு வேண்டும் என்கின்றனர். இதை, அக்கட்சி தலைமை ஏற்றுக் கொண்டதா என தெரியவில்லை.

டவுட் தனபாலு: தி.மு.க., கூட்டணியில் இருக்கும் உங்களுக்கு அனைத்திலும், 'பங்கு' குடுத்திருக் காங்களா... முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நெருங்கிய நண்பர் என்பதால், உங்களுக்கு மட்டும் பங்கு தந்துட்டு, மற்ற கூட்டணி கட்சிகளுக்கு, 'அல்வா' குடுத்துட்டாங்களோ என்ற, 'டவுட்'தான் வருது!

lll



பா.ம.க., கவுரவ தலைவர் ஜி.கே.மணி: எல்லா கட்சிகளுடனும் கூட்டணிக்கு பேசி வருகிறோம். அதில் ஒன்றும் தவறு இல்லை. ஆளும் கட்சி, எதிர்க்கட்சி, காங்கிரஸ், கம்யூனிஸ்ட், வி.சி., என பார்க்கிற எல்லா கட்சிகளுடன் பேச்சு நடந்து வருகிறது. கூட்டணி அறிவிப்பை, ராமதாஸ் வெளியிடுவார்.

டவுட் தனபாலு: எல்லா கட்சி களுடன் பேசுறீங்கன்னா என்ன அர்த்தம்... எந்த கட்சி, உங்களை சேர்த்துக்குமோ அங்க சேர்ந்து, சேர்க்காத கட்சிகளை திட்டுவீங்களோ... அப்படி என்றால், பா.ம.க.,வின் சமூக நீதி கொள்கை, கோட்பாடுகளை எல்லாம் பரண்ல துாக்கி கடாசிட்டீங்களா என்ற, 'டவுட்' வருதே!

lll

பத்திரிகை செய்தி: த.வெ.க., சார்பில் சட்டசபை தேர்தலில் போட்டியிட விரும்புவோருக்கு, 100 ரூபாய்க்கு விண்ணப்பங்கள் விற்பனை செய்யப்பட்டன. முதல் நாளில், 10,000 பேர் வாங்கி சென்றனர். 'ஆன்லைன்' வழியே 40,000 பேர் பதிவிறக்கம் செய்தது என மொத்தம், 50,000 பேர் விருப்ப மனுக்களை பெற்றுள்ளனர். ஆனால், 5,000க்கும் குறைவான மனுக்கள் தான் பூர்த்தி செய்யப்பட்டு வந்துள்ளன. அதிலும், பல மனுக்களில் கட்டண தொகைக்கான, 10,000 ரூபாய், 'டிடி' இணைக்கப்படவில்லை.

டவுட் தனபாலு: அ.தி.மு.க., - தி.மு.க., போன்ற தமிழகத்தை ஆண்ட, ஆட்சி செய்து சம்பாதித்த கட்சியினர் என்றால், 15,000, 25,000 ரூபாய்னு கட்டி விண்ணப்பம் தருவாங்க... விஜய் படத்தை பிளாக்ல டிக்கெட் வாங்கி பார்த்தவங்களிடம், 10,000 ரூபாய் கட்டுங்கன்னு சொன்னா, அவங்க எங்க போவாங்க... செங் கோட்டையன் மாதிரி சீனியர்கள், இதை எல்லாம் விஜய்க்கு எடுத்து சொல்லவில்லையா என்ற, 'டவுட்'தான் வருது!

lll

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us