தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/டவுட் தனபாலு/ 'டவுட்' தனபாலு

 'டவுட்' தனபாலு

 'டவுட்' தனபாலு


PUBLISHED ON : பிப் 22, 2026 03:08 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : பிப் 22, 2026 03:08 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சிவகங்கை காங்., - எம்.பி., கார்த்தி: மகளிர் உரிமைத்தொகை, 5,000 ரூபாய் வழங்கியதை வரவேற்கிறேன். மக்களுக்கு நேரடியாக அடிப்படையான மாத சம்பளம் போல, மாதம் 5,000 ரூபாய் வழங்க மாநில அரசு முயற்சிக்க வேண்டும். நேரடியாக வங்கி மூலம் பணம் செலுத்தும்போது, சுற்றுவட்டார பொருளாதாரம் மேம்படும். கிராமத்தில் புதிய தொழிற்சாலைகளே இல்லாத நிலையில், மாதந்தோறும் மகளிர் உரிமைத்தொகை வழங்குவது கைகொடுக்கும்.

டவுட் தனபாலு: அது சரி... 'யாரும் வேலை, வெட்டிக்கு போக வேண்டாம்... 1ம் தேதியானா அரசு பணம் அனுப்பிடும்... எல்லாரும் மோட்டு வளையை பார்த்துட்டு படுத்து கிடங்க'ன்னு சொல்றீங்களோ... கிராமங்கள்ல எல்லாரும் உழைக்காம இருந்துட்டா, நெற்பயிர்கள் எல்லாம் தானா வளர்ந்துடும்னு நினைக்கிறீங்களோ என்ற, 'டவுட்'தான் வருது!

lll



பா.ம.க., நிறுவனர் ராமதாஸ்: கடந்த ஐந்தாண்டு கால தி.மு.க., ஆட்சியில், காலை உணவுத் திட்டம், மகளிர் உரிமைத்தொகை போன்றவை வரவேற்கக் கூடியவை. ஆனால், தமிழகத்தில் மது குடிப்போரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து, இந்திய அளவில் முதன்மை மாநிலமாகி வருவது ஏற்புடையதல்ல. இது, மனித வளத்திற்கு உகந்தது அல்ல.

டவுட் தனபாலு: மது குடிப்போரின் எண்ணிக்கை அதிகரிப்பதால் தான், காலை உணவுத் திட்டம், மகளிருக்கு உரிமைத்தொகை, அவ்வளவு ஏன்... இப்ப கூட, 5,000 ரூபாயை அள்ளி விட முடிஞ்சிருக்கு... மது விற்பனை வருவாய் இல்லாமல், நலத்திட்டங்களை செய்யும் நிர்வாகத்திறன் தி.மு.க., அரசுக்கு இல்லையோ என்ற, 'டவுட்'தான் வருது!

lll

ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ: தேர்தல் ஆணையம் தன்னிச்சையாக செயல்படவில்லை; யாரோ இயக்குகின்றனர். அதனால், ம.தி.மு.க.,வுக்கு அங்கீகாரமே இல்லாத நிலை ஏற்பட்டிருக்கும். அதை முன்கூட்டியே அறிந்து தான், திருச்சி லோக்சபா தொகுதியில் தனி சின்னத்தில் போட்டியிட்டு, ம.தி.மு.க.,வை காப்பாற்றினோம். தேர்தல் நேரத்தில் நான் யாருக்கெல்லாம் உதவினேனோ, அவர்கள் எல்லாம் ம.தி.மு.க.,வை அழித்து விடலாம் என நினைத்து, என்னை பற்றி அவதுாறு பரப்பினர். ம.தி.மு.க.,வை யாராலும் அழிக்க முடியாது.

டவுட் தனபாலு: தங்களது வெற்றிக்கு அச்சுறுத்தலா இருக்கும் கட்சியை தான், எதிர்க்கட்சிகள் அழிக்க பார்க்கும்... ஆனா, ஆளும் கூட்டணியில் பிள்ளை பூச்சி மாதிரி ஒரு ஓரமா இருக்கும் உங்க கட்சியை அழிக்க, யாராவது நேரத்தை வீணடிப்பாங்களா என்பது, 'டவுட்'தான்!

lll

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us