தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பொக்கிஷம்/சென்னையில் சர்வதேசத் தரத்தில் ஒரு நிழற்படத் திருவிழா:

சென்னையில் சர்வதேசத் தரத்தில் ஒரு நிழற்படத் திருவிழா:

சென்னையில் சர்வதேசத் தரத்தில் ஒரு நிழற்படத் திருவிழா:


PUBLISHED ON : ஜூன் 03, 2026 09:23 PM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூன் 03, 2026 09:23 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஒளிப்படக் கலையின் உலகளாவிய வரலாற்றில் சென்னைக்கு (மெட்ராஸ்) என்று ஒரு தனித்துவமான இடமுண்டு. உலகின் இரண்டாவது மிகப் பழமையான புகைப்படச் சங்கமான 'தி போட்டோகிராபிக் சொஸைட்டி ஆஃப் மெட்ராஸ்' , தனது வருடாந்திர புகைப்படக் கண்காட்சியான 'கான்ஃப்லுயன்ஸ்' நிகழ்வைச் சென்னையில் உள்ள புகழ்பெற்ற லலித் கலா அகடமியில் கோலாகலமாகத் தொடங்கியுள்ளது.Image 1583725ஜூன் 2, 2026 அன்று தொடங்கிய இக்கண்காட்சி, வரும் ஜூன் 8, 2026 வரை புகைப்பட ஆர்வலர்களுக்கு விருந்தாக அமையவுள்ளது.Image 1583726இந்தக் கண்காட்சியில் 'பிஎஸ்எம்' அமைப்பின் திறமைமிக்க உறுப்பினர்களால் கேமராவில் சிறைபிடிக்கப்பட்ட 191 வியக்கத்தக்க புகைப்படங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இவை வெறும் படங்கள் மட்டுமல்ல; ஒவ்வொன்றும் ஒரு குட்டிக் கதை சொல்லும் கலைப் படைப்புகள்!Image 1583727பார்வையாளர்களைக் கவரும் வண்ணம் இவை 7 பிரத்யேகப் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன:

மனித உணர்வுகளைக் கடத்தும் உருவப்படங்கள்

இயற்கையின் பேரழகைப் பேசும் இயற்கைக்காட்சிகள்

காடுகளின் மர்மம் நிறைந்த வனவிலங்குகள்

கிளாசிக் பாணியிலான ஓர் நிறமிப் படங்கள்

வண்ணங்களின் கொண்டாட்டமான பல்நிறமிப் படங்கள்

வாழ்வியலைப் பிரதிபலிக்கும் தெருக்காட்சிகள்

காலத்தை வென்று நிற்கும் வரலாற்றுச் சின்னங்கள்Image 1583728இவை தவிர, சர்வதேச அளவில் பிஎஸ்எம் நடத்திய புகைப்படப் போட்டிகளில் உலகெங்கிலும் இருந்து தேர்வாகி வெற்றி பெற்ற 80 சர்வதேசத் தரத்திலான புகைப்படங்களும் இங்கே தனி இடத்தைப் பிடித்துள்ளன.

திரைத்துறையில் தனது தனித்துவமான காட்சி அமைப்புகளுக்காகப் புகழ்பெற்ற திரைப்பட ஒளிப்பதிவாளரும் இயக்குனருமான அறிவழகன் இந்த விழாவைத் தொடங்கி வைத்தார்.

தொடக்க விழாவில் பேசிய அவர், ஒரு புகைப்படக் கலைஞராகத் தொடங்கி, பின் ஒளிப்பதிவாளராகத் தடம் பதித்து, இன்று இயக்குநராக உயர்ந்த தனது திரைப் பயணத்தை நெகிழ்ச்சியோடு பகிர்ந்து கொண்டார்.Image 1583729'ஒரு நிலையான புகைப்படத்தில் நாம் கற்கும் கோணங்களும், வெளிச்சத்தின் நுணுக்கங்களும்தான் பிற்காலத்தில் திரைப்படங்களில் ஒரு காட்சியை நகரும் படமாக செதுக்க எனக்குப் பெரிதும் உதவின'என்று குறிப்பிட்ட அவர், புகைப்படக் கலையின் தாக்கம் சினிமா ஒளிப்பதிவில் எவ்வளவு முக்கியமானது என்பதை விவரித்து, பிஎஸ்எம் உறுப்பினர்களின் அசாத்திய உழைப்பைப் பாராட்டினார்.

கலையைத் தாண்டி மனித நேயத்திற்கும் இந்த நிகழ்வில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் இயற்கையெய்திய சங்கத்தின் மூத்த உறுப்பினர்களான ரமணிதரன் மற்றும் விவேகாநந்தன் ஆகியோரின் நினைவைப் போற்றும் விதமாக, அவர்களின் அரிய புகைப்படங்கள் அரங்கின் ஒரு பகுதியில் பிரத்யேகமாகக் காட்சிப்படுத்தப்பட்டு, அவர்களுக்குக் கௌரவமான புகழஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.

இத்தகைய பிரம்மாண்டமான கண்காட்சியைச் சாத்தியமாக்கிய பெருமை, இதன் தலைவர் லக்ஷ்மிநாராயணன் மற்றும் அவரது நிர்வாகக் குழுவையே சாரும். இவருடன் இணைந்து துணைத்தலைவர் அஷோக் விஸ்வநாதன்,செயலாளர் நாராயணன் முத்தையா,பொருளாளர் சிவலை செந்தில்நாதன்,போட்டிகள் & கண்காட்சிக்குழுத் தலைவர் ராமஸ்வாமி ஆகியோர் ஏனைய உறுப்பினர்களுடன் சேர்ந்து இந்த 2026-ஆம் ஆண்டின் 'கான்ஃப்லுயன்ஸ்' விழாவைச் சர்வதேசத் தரத்திற்கு உயர்த்தியுள்ளனர்.

சென்னை கீரீன்வேஸ் சாலையில் உள்ள லலித் கலா அகடமியில் நடைபெறுகிறது.பார்வையாளர் நேரம் பகல் 11 மணி முதல் மாலை 6 மணிவரை.

நிழற்படக் கலையை நேசிக்கும் ஒவ்வொருவரும் தவறவிடக் கூடாத ஒரு அற்புதக் காட்சித் திருவிழா இது

-எல்.முருகராஜ்-படங்கள்:லட்சுமணன்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us