தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/டவுட் தனபாலு/ 'டவுட்' தனபாலு

 'டவுட்' தனபாலு

 'டவுட்' தனபாலு


PUBLISHED ON : பிப் 23, 2026 01:51 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : பிப் 23, 2026 01:51 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வி.சி., கட்சி தலைவர் திருமாவளவன்: மது மற்றும் போதை பொருட்கள் ஒழிப்பு என்பது, ஒட்டுமொத்த இந்திய மக்களின் கோரிக்கை. தமிழகத்தில் படிப்படியாக மதுக்கடைகளின் எண்ணிக்கையை குறைத்து, அடுத்தடுத்து மூட வேண்டும் என வலியுறுத்தி வருகிறோம். அது குறித்த நடவடிக்கையில் எந்த முன்னேற்றமும் இல்லை என்பது கவலை தருகிறது. எனவே, மது ஒழிப்பு குறித்து, தி.மு.க., தன் தேர்தல் அறிக்கையில் அறிவிக்க வேண்டும்.

டவுட் தனபாலு: 'தேர்தல் அறிக்கையில் தானே... தாராளமா அறிவிச்சிட்டா போச்சு'ன்னு அறிவிச்சிடுவாங்க... அதை எல்லாம் கண்டிப்பா செய்யணும்னு அவசியம் இல்லையே... உங்களுக்கு, 'டவுட்' இருந்தால், 2021ல் தி.மு.க., வெளியிட்ட தேர்தல் அறிக்கையை எடுத்து பாருங்க... எத்தனை வாக்குறுதிகள் பெண்டிங்குல இருக்கு என்பது தெரியும்!



பா.ம.க., தலைவர் அன்புமணி: நாடு சுதந்திரம் அடைந்த பின், 74 ஆண்டுகளில் தமிழக அரசு வாங்கிய மொத்த கடன், 4.54 லட்சம் கோடி ரூபாய். ஆனால், கடந்த ஐந்தாண்டுகளில் மட்டும், தி.மு.க., அரசு வாங்கிய கடன், 4.96 லட்சம் கோடி ரூபாய். இது தவிர, பொதுத்துறை நிறுவனங்கள் வாயிலாக, 5 லட்சம் கோடி ரூபாய் கடனை தி.மு.க., அரசு வாங்கியுள்ளது. இதையும் சேர்த்து, மொத்தம் 1௫ லட்சம் கோடி ரூபாய் கடனில் தமிழகம் தத்தளித்து கொண்டிருக்கிறது.

டவுட் தனபாலு: பா.ஜ., ஆளும் குஜராத் மாநிலத்தில், புதுசா எந்த வரிகளும் விதிக்காமல், 974 கோடி ரூபாய் உபரி வர்ற மாதிரி பட்ஜெட் தாக்கல் பண்ணியிருக்காங்க... அங்க, பூரண மதுவிலக்கும் அமலில் இருக்கு... மது விற்காம, உபரி பட்ஜெட் போட்ட குஜராத்திடம், தமிழக ஆட்சியாளர்கள் பாடம் படிக்கணும் என்பதில், 'டவுட்'டே இல்லை!

பத்திரிகை செய்தி: தேர்தல் அறிவிப்பு வெளியான பின், முக்கிய நகரங்களுக்கு மட்டும் செல்ல த.வெ.க., தலைவர் விஜய் திட்டமிட்டுள்ளார். இதனால், 234 தொகுதிகளிலும் வீடியோ பிரசாரம் செய்ய திட்டமிட்டுள்ளார். வேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட்ட பின், அவர்களின் பெயர்களை சொல்லி, தொகுதிக்கான சில வாக்குறுதிகளுடன் தனித்தனி வீடியோ வெ ளியிட திட்டமிட்டுள்ளார்.

டவுட் தனபாலு: மாபெரும் மக்கள் தலைவரான எம்.ஜி.ஆரே, தேர்தல் வந்தால் தமிழகம் முழுக்க சுற்றி வந்து, மக்களை நேருக்கு நேர் சந்திப்பாரு... அவரை விட தன்னை பெரிய தலைவர்னு விஜய் நினைக்கிறாரா அல்லது வேகாத வெயில்ல அலைஞ்சு, உடம்பை கெடுத்துக்க வேண்டாம்னு நினைக்கிறாரா என்ற, 'டவுட்'தான் வருது!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us