தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/டவுட் தனபாலு/ 'டவுட்' தனபாலு

 'டவுட்' தனபாலு

 'டவுட்' தனபாலு


PUBLISHED ON : பிப் 25, 2026 03:11 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : பிப் 25, 2026 03:11 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தமிழக பா.ஜ., துணை தலைவர் குஷ்பு: தேசிய ஜனநாயக கூட்டணியில் தொகுதி பங்கீடு குறித்து, உரிய பேச்சுவார்த்தைக்கு பின்னர் அறிவிக்கப்படும். அதன்பிறகே, தேர்தலில் நான் போட்டியிடுகிறேனா, இல்லையா என்பதை சொல்ல முடியும். எனக்கு வாய்ப்பு கொடுத்தால் தான், தேர்தல் பணி செய்வேன் என்பது கிடையாது. பிரதமர் மோடியின் நலத்திட்டங்களை மக்களிடையே கொண்டு செல்ல, தொடர்ந்து பணியாற்றுவேன்.

டவுட் தனபாலு: கடந்த, 2021 சட்டசபை தேர்தலில், சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிட்ட உங்களுக்கு, பா.ஜ.,வினர் பெருசா ஒத்துழைப்பு தராம தோத்துட்டீங்க... இந்த முறை கூட்டணி பலமில்லாம இருப்பதால், 'சீட்' கிடைக்காம இருந்தாலே நல்லதுன்னு நினைக்கிறீங்களோ என்ற, 'டவுட்' தான் வருது!

lll



தி.மு.க., இளைஞரணி செயலர் உதயநிதி: 'தி.மு.க., இளைஞரணியில், 5 லட்சம் நிர்வாகிகள், 50 லட்சம் உறுப்பினர்கள் உள்ளனர். ராணுவம் போல் இளைஞரணி பணியாற்றுகிறது' என, முதல்வர் ஸ்டாலின் அடிக்கடி கூறுவார். கட்சியில் பொறுப்புக்கு வரும் முன், இளைஞரணியில் பயிற்சி எடுக்க வேண்டும். முதல்வர், நான், பல அமைச்சர்கள், எம்.பி.,க்கள், எம்.எல்.ஏ.,க்கள் என பலரும் பயிற்சி எடுத்து தான், இந்த நிலைக்கு வந்திருக்கிறோம்.

டவுட் தனபாலு: உங்க கட்சியில், 1980ல் இளைஞர் அணியை உருவாக்கி, 46 வருஷங்கள் ஆகிடுச்சு... அதுல நிறைய பேர் உழைச்சிருக்காங்க... ஆனாலும், உங்க தந்தையும், நீங்களும் மட்டும் தானே முதல்வர் மற்றும் துணை முதல்வர் பதவிகளை அலங்கரிக்க முடிஞ்சிருக்கு... மத்தவங்களுக்கு ஏன் அந்த வாய்ப்பு கிடைக்கலை என்ற, 'டவுட்' வருதே!

lll

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன்: தே.மு.தி.க.,வும் இப்போது தி.மு.க., கூட்டணியில் இணைந்துள்ளது. அக்கட்சிக்கு எவ்வளவு சீட்கள் கொடுப்பர் என்பது தெரியாது. ஆனால், அவரவர் சக்திக்கேற்ப தேவையான தொகுதிகளை, தி.மு.க., தலைமை வழங்கும். ராமதாஸ் தரப்பு பா.ம.க.,வை தி.மு.க., கூட்டணியில் சேர்க்கக்கூடாது என எந்த நெருக்கடியையும், கூட்டணி தலைமைக்கு நாங்கள் தரவில்லை. கூட்டணிக்கு அக்கட்சி தேவையென்றால், தி.மு.க., தான் அந்த முடிவை எடுக்கும்.

டவுட் தனபாலு: இதன் வாயிலாக, 'கூட்டணிக்குள்ள பா.ம.க., வந்தாலும், எங்களுக்கு எந்த பிரச்னையும் இல்லை... ஆனா, எங்க சக்திக்கு ஏற்ப தொகுதிகளை மட்டும் தந்துடுங்க... நாங்க வாங்கிட்டு கமுக்கமா போயிடுறோம்'னு தி.மு.க., தலைமைக்கு சொல்லாம சொல்றீங்களோ என்ற, 'டவுட்' தான் வருது!

lll

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us